தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்!



யாழ்.மாவிட்டபுரம் அமெரிக்க மிசன் பாடசாலை மூன்று வருடமாக திறக்கப்படவில்லை
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 09:08.47 AM GMT ]
யாழ்.வலிகாமம் வடக்கு-மாவிட்டபுரம் பகுதியில் 43 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மாவட்ட புரம் தெற்குஅமெரிக்க மிஷன் பாடசாலை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக திறக்கப்படாத நிலையில் இருப்பதாகவும் , திறக்கப்படாமைக்கான காரணமும் உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை. எனவும்.வலி,வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலை 1990ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற போர் மற்றும் இடப்பெயர்வினால் சேதமடைந்த நிலையில், 2010ம் ஆண்டு மீண்டும் இப்பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் 2011ம் ஆண்டு யூன் மாதம் 14ம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் துரித மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் இந்தப் பாடசாலை 43லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரை பாடசாலை திறக்கப்படவில்லை, பாடசாலைக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தப் பகுதி ஆரம்பப்பிரிவு மாணவர்கள் நீண்டு தூரம் பயணித்து வேறு பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வளவு பெரும் தொகை நிதியில் பாடசாலையினை கட்டி முடித்த பின்னர் இன்னமும் அது திறக்கப்படாமலிருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் புதிய பாடசாலைக் கட்டிடம் உரிய முறையில் பொறுப்புவாய்ந்தவர்களினால் பராமரிக்கப்படாமையினால் கட்டிடம சேதமடைந்தும், கிணற்றிலுள்ள நீர் பம்பிக்கான குழாய்கள் திருடப்பட்டும் அழிவடைந்து கொண்டிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்,என்னால் சுட்டிக்காட்டப்பட்டபோதும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjs6.html

முல்லை மாவட்டத்தின் பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களை ரவிகரன் நேரில் சென்று பார்வை
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 09:41.29 AM GMT ]
கடந்த இரண்டு வாரங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பாடசாலைகளுக்கும் சென்று மாணவர்களின் குறைகளை கேட்ட வண்ணம் உள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் அதன் தொடர்ச்சியாக இன்று துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச பாடசாலைகள் பலவற்றுக்கு விஜயம் செய்து அவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள், கல்வித்தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
இவை தொடர்பில் கருத்து தெரிவித்த ரவிகரன், மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய இப்பிரதேசங்களில் தேவைகளும் குறைகளும் நிறையவே உண்டு.
குறிப்பாக போக்குவரத்து, ஆளணி, பௌதீக வளப்பற்றாக்குறைகளே பல பாடசாலைகளிலும் காணப்படுகின்றன.
என்னால் இன்று பார்வையிடப்பட்ட பதின்நான்கு பாடசாலைகளில் பெரும்பாலானவை தண்ணீர், போக்குவரத்து தொடர்பிலான குறைகளோடு காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக விநாயகபுரம் பகுதியில் பாடசாலை உள்ள பகுதியில் நல்ல தண்ணீர் கிடையாது , சுமார் 2 கிலோமீற்றர் தூரம் வரை நல்ல தண்ணீருக்கு செல்ல வேண்டிய நிலையில் பாடசாலை சமூகமும் அதனை அண்டியுள்ள மக்களும் கடும் சிரமங்களையே எதிர்நோக்குகிறார்கள்.
யோகபுரம் மகாவித்தியாலயத்தில் கிணறு வற்றிய நிலையில் உள்ளது.
குழாய்க்கிணறுகளிலும் தண்ணீர் வராத நிலையே காணப்படுகிறது. கிணற்றினை ஆழப்படுத்தினால் அம்மக்களின் தண்ணீர் குறை தீரலாம் என்பதை பார்த்து அறியமுடிந்தது.
இன்னும் சில பாடசாலைகளிலும் இதே நிலைகளை அவதானிக்க முடிந்தது , இருந்தும் ஓரளவு ஆறுதலாக பிரதேச சபையினர் முயற்சியினால் பெரிய கொள்கலன் மூலம் நீர்விநியோகம் செய்யப்பட்டுள்ளதையும் அவதானித்தேன்.
இருந்தாலும் இதற்கான தீர்வாக குறித்த கிணறுகளை ஆழப்படுத்துதலும், ஆழம் கூடிய வகையில் குழாய் கிணறுகள் அமைத்தலும் சரியாக இருக்கும் என்ற ஆலோசனைகளையும் பலர் முன்வைத்தனர்.
பாடசாலைகளில் காணப்படும் இவ்வாறான குறைகளை அகற்றி பாடசாலை சமூகத்தின் சீரான செயற்பாடுகளை உறுதிசெய்வது எம்மவர்களின் கடமையாகிறது.
இவ்வாறாக குறைகளை சீர்ப்படுத்த என்னால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளேன் என்று தெரிவித்தார் ரவிகரன்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjs7.html
ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்!
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 09:52.48 AM GMT ]
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐநா விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக. வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்த விசாரணை குழுவுக்கு வீசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது.
இதனையடுத்து ஐநா விசாரணை குழுவுக்கு இந்தியா வீசா வழங்க வேண்டும் என்று கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய அதிமுக, ஐ.நா. விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
கேள்வி நேரத்தின் போது தொடர்பாக பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, ஐ.நா. விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjty.html

Geen opmerkingen:

Een reactie posten