கனடாவில் புகலிடம் கோரிய ‘எம்வீ சன்சீ’ அகதிகளின் இன்றைய நிலை – அல்ஜசீராவின் புதிய ஆவணப்படம் போருக்குப் பின்னர் இலங்கையிலிருந்து பிரிட்டிஸ் கொலம்பியா வழியாக கனடாவைச் சென்றடைந்த ‘எம்வீ சன் சீ’ கப்பலில் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் பெருமளவானவர்கள் இன்னமும் அகதி அந்தஸ்தினைப் பெறுவதில் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
அகதிகள் சென்றடைந்த காலப் பகுதியில் அவர்கள் தொடர்பில் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் காலப் போக்கில் அவர்கள் தொடர்பில் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது. இந்த நிலையில் அல்ஜசீரா ஊடகம் அந்த அகதிகளின் இன்றைய நிலை தொடர்பிலும் ஈழத்தில் இறுதிப்போர் தொடர்பிலும் அகதிகள் புலம்பெயர்வதற்கான சூழல் தொடர்பிலும் ஆவணப் படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten