தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

இப்படி எழுதியவனை விட இனத்துரோகியாக இவன் குறிப்பிட்ட எவராலுமே முடிந்திருக்குமா?அவர்கள் போராளிகள்,இவன் விசுவாசி!

நேற்று PLOTE, இன்று பத்மநாபா, நாளை கருணா, TMVP, EPDP? TNA யாருக்கு துரோகிகளுக்கா..

அன்று முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதவாத அரசியல் மறுமுகமாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சுரேஸ் அணி ஆகிய நான்கு கட்சிகளும், தமிழ் வெகுசன அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.
ஆனால் 2009 மே 18 அன்று தமிழீழ நடைமுறை அரசை முற்று முழுதாக அழித்து, தமிழீழ தாயகம் முழுவதையும் தனது ஆக்கிரமிப்புப் பிடிக்குள் சிங்களம் கொண்டு வந்ததை தொடர்ந்து திட்டமிட்ட வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் தமிழ் வெகுசன அமைப்புக்களின் பிரதிநிதிகளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு சம்பந்தன் – சுமந்திரன் குழுவினர் வெளியேற்றினர்.
இவர்களின் வெளியேற்றம் நடைபெற்ற ஏக காலத்தில் தேசவிரோத அரசியலில் முதிர்ச்சி பெற்ற புளொட் ஒட்டுக்குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டனர்.
தற்பொழுது இதன் தொடர்ச்சியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.07.2014) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பத்மநாபா உள்ளடங்கலான ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த தேசவிரோதிகளை நினைவுகூரும் நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணியினரால் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா, தமிழ் மக்களின் விடுதலைக்காக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க உறுப்பினர்கள் போராடி மடிந்தார்கள் என்ற தொனியில் உரையாற்றியுள்ளார்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அல்பிரட் துரையப்பா தொடக்கம் அமிர்தலிங்கம் உள்ளடங்கலாகக் கே.பியின் துரோகத்தனம் வரை துரோக அரசியல் பற்றிய பட்டறிவைக் கொண்ட மாவை சேனாதிராஜா அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்படுவதற்கு முன்னர் தமிழீழ மண்ணில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பல் இழைத்த சமூக விரோதச் செயல்கள் பற்றியும், அதன் பின்னர் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் காலத்தில் அக்கும்பல் புரிந்த தமிழின அழிப்பு நடவடிக்கைகள் பற்றியும் அறியாதவர் அல்ல.
தமிழீழ மண்ணை விட்டு இந்தியப் படைகள் அகன்ற பின்னர் சிங்களப் படைகளின் ஒட்டுக்குழுவாக மாறி ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பல் புரிந்த துரோகத்தனங்களும் மாவை சேனாதிராஜாவுக்கு நன்கு தெரியும்.
அப்படிப்பட்ட தமிழ்த் தேசவிரோதக் கும்பலை வழிநடத்திய பத்மநாபாவிற்கும், அவரது சகாக்களான தேசவிரோதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேடையமைத்துக் கொடுத்ததும், அம் மேடையில் அத்தேசவிரோதிகளை தியாகிகளாக வர்ணிக்கும் தொனியில் மாவை சேனாதிராஜா உரையாற்றியமையும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களைப் பொறுத்தவரை கண்டனத்திற்குரிய செய்கையாகவே பார்க்கப்படுகின்றது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒட்டுக்குழுவின் துரோக அரசியலில் இருந்து விலகித் தமிழ்த் தேசிய அரசியலில் இணைவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்வந்த பின்னரே அவருக்கும், அவரது சகாக்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணியினர் இணைவதற்கு மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடமளித்தார்களேயன்றி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒட்டுக்குழுவினர் இணைவதற்கு இடமளிக்கவில்லை என்பதையும் மாவை சேனாதிராஜா புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று தேசியம் பேசுகின்ற அனந்தி யார் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளால் ஐயத்துடன் பார்க்கப்பட்டு முள்ளிவாய்க்கால் மட்டும் இவர் மீது புலிகளின் கடைசி நிமிடம் வரை நம்பியதில்லை காரணம் அனந்தியின் வரலாற்று அத்திபாரம் இவருடைய சகோதரி உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வாரிசுகள் இவர்களின் அடிப்படைச் சித்தாந்தம் குறித்த கட்சிக்கே விசுவாசமாக அமைந்திருக்கும் சுரேஸ் அனந்திக்கு இன்று புதியவரல்ல இவர் ஆரம்ப காலத் தோழர் இதைக் கூறும் இடத்து பலர் பலவிதமாகக் கூறுவர் ஏன் ஒரு குடும்பத்தில் எத்தனை மாற்று இயக்கங்கள் ஏன் அனந்தி அக்காவுக்கு மட்டும் இந்த நியாயமில்லாத விமர்சனம் பல்லாயிரம் உயிர்களின் கல்லறைகளில் நின்றுதான் போராடுகிறோம் என்று வரிக்கு வரி கூறும் அனந்தி புளொட் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒட்டுக் குழுக்களால் எத்தனை எத்தனை போராளிகள் மண்ணில் விதையானார்கள் என்னும் விபரம் தெரியுமா ஒட்டு மொத்த காணாமற் போன பெண்களின் சாட்சியாகவே நான் இன்று அரசியலில் வந்தேன் நானும் கணவனைத் தேடுகிறேன் என்கிறார் உண்மையான தேசியத்திற்கு எழிளன் போராடியிருந்தால் இவருக்கு ஏன் ஒட்டுக்குழுக்களின் மேடை அரசியல் ஒற்றுமை என விளக்கம் கூறலாம் அப்படியானால் மாகாண சபையில் மக்கள் அள்ளி இறைத்த வாக்கு இதற்காகவா விடுதலைப் புலிகளின் ஒரு சின்னமாகவே அன்றி ஒட்டுக் குழுவுன் கூடிக் கும்மாளம் அடிக்கவல்ல
இன்று ஆளுனர் சந்திரசிறிக்கு வரிக்கு வரி விமர்சிக்கும் அனந்தியின் கூற்றுக்கள் உண்மை எத்தனை தமிழ்ப் பெண்கள் சுரேஸ் சித்தாத்தன் ஆகியவர்களால் வகை தொகை அற்று சின்னாபின்னமாக்கப் பட்டனர் அதனைக் கூறுவாரா எத்தனை தமிழ் குடும்பங்கள் சுரேஸ் சித்தாத்தன் என்றால் இன்றும் நடுங்குகின்றனர்
அனந்தியை இன்று வரை யாரும் அரசியல் வாதியாக பார்க்கவில்லை காரணம் தமிழர் போராட்டத்தில் ஒரு வடிவமே அன்றி வேறு எதுவும் இல்லை அரசியல் சுடுகாட்டில் நின்ற கஜேந்திரனும் வெளிநாட்டில் போராட்டத்தைக் காட்டி வாழ்ந்து வரும் ஒரு சில ஜதார்த்தம் புரியாத முட்டாள்கள் மற்றும் பிளைப்புக்காக வாழும் சில ஊடகவியளாலருமே அனந்தியை பாதாளத்தில் தள்ளுகின்றனர்.
இதனைப் புரிவாரா அனந்தி அல்லது எல்லாம் புரிந்து சராசரி அரசியல் வாதியாவாரா புலிகளையும் போராட்த்தையும் பலர் விற்றுப் பிள்ளைப்பு நடத்துகின்றனர் அதில் இவரும் இணைவாரா அல்லது இவரின் நிலை என்ன.
http://www.jvpnews.com/srilanka/77098.html

Geen opmerkingen:

Een reactie posten