அடிபணியாத அதிகாரிகளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் கட்டாய ஓய்வில் அனுப்பும் ராஜபக்ஷ அரசு- மஹிந்தவின் ஆசையால் விரயமாகும் பொது நிதி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 09:55.36 AM GMT ]
தமக்கு அடிபணியாத தலைமை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் ராஜபக்ஷவினர் தயாராகி வருகின்றனர்.
அண்மைக்காலமாக இந்த நிலைமையை எதிர்நோக்கி இருக்கும் முக்கிய அதிகாரி பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் என தெரியவந்துள்ளது.
அவரை கட்டாயம் ஓய்வில் அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத குழுக்களினால் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்ட இனவாத மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து பக்கசார்பற்ற வகையில் சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் மா அதிபர் மேற்கொண்ட முயற்சியே இதற்கு காரணம் எனப் பேசப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத குழுக்களினால் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்ட இனவாத மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து பக்கசார்பற்ற வகையில் சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் மா அதிபர் மேற்கொண்ட முயற்சியே இதற்கு காரணம் எனப் பேசப்படுகிறது.
இதனை தவிர மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் தேர்தல் பணிகளில் பொலிஸார் ஈடுபடுவதை எதிர்த்தமை, அரசாங்க முக்கியஸ்தர்களின் சட்டவிரோத வர்த்தகங்களை தடுக்க பொலிஸாரை ஈடுபடுத்தியமை என்பனவும் பொலிஸ் மா அதிபரை கட்டாய ஓய்வில் அனுப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டிலேயே முடிவடைய உள்ளது. எனினும் அவரை கட்டாய ஓய்வில் அனுப்ப அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு நகரில் நடக்கும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டகார்களின் கண்கள் வெளியில் வரும் வரை தாக்குதல் நடத்த உத்தரவிடும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஓய்வுபெறும் வயதை பூர்த்தி செய்துள்ள நிலையிலும் அவருக்கு மூன்றாவது முறையும் பணிநீடிப்பு வழங்கப்பட்டது.
இதன் மூலம் அரசாங்கத்தின் அரசியல் தேவை தெளிவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி சுதந்திரமாக கடமையை செய்ய முடியாத படி கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக எவருக்கும் அறிவிக்காமல் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் அண்மையில் ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் மா அதிபர் அதில் கலந்து கொள்ளவில்லை தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் ஆசையால் விரயமாகும் பொது நிதி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட தேவைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
மிஹின் லங்கா நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 440 கோடி ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது என பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தெரியவந்துள்ளது.
குறித்த விமான நிறுவனம் 2013 ஆம் ஆண்டு சுமார் 287 கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதேவேளை மிஹின் லங்கா நிறுவனம் கடந்த ஏப்ரல் இறுதி வரை அரச வங்கிகளுக்கு 28 கோடியே 80 லட்சம் ரூபா கடனை செலுத்த வேண்டியிருந்ததாக அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான அரையாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjo5.html
தயான் ஜயதிலக்கவை அச்சுறுத்திய கோத்தபாய!
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 09:24.46 AM GMT ]
கொழும்பில் நடைபெற்ற இலங்கை - பாலஸ்தீன ஒத்துழைப்பு குழு ஏற்பாடு செய்திருந்த பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது. நான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கினோன்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது. நான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கினோன்.
இலங்கையின் யுத்தத்திற்கும் இஸ்ரேலின் யுத்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை காட்ட வேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது.
அப்போது தொலைபேசியில் குறுஞ் செய்தியை அனுப்பிய ஒருவர், இஸ்ரேலுக்கு எதிராக பேச நீ யார் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த நான் உங்களது அண்ணன் நியமித்த தூதுவர் எனக் கூறினேன்.
இஸ்ரேலின் முறையை வடக்கு கிழக்கில் முன்னெடுத்தன் காரணமாகவே பிரிவினைவாதத்திற்கு உந்து சக்தி கிடைத்தது.
இஸ்ரேலின் முறையை வடக்கு கிழக்கில் முன்னெடுத்தன் காரணமாகவே பிரிவினைவாதத்திற்கு உந்து சக்தி கிடைத்தது.
இலங்கை தற்போது இஸ்ரேலின் பொறியில் விழுந்துள்ளது. அன்று மொசாட் அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்து கொண்ட உண்மையான பயிற்சிகளை புலிகள் அமைப்பு வழங்கியது.
இலங்கை, இஸ்ரேலின் முட்டாள் தனமாக வேலைகளை செய்ததால், இலங்கை பற்றி அனைவரும் பேசி வருகின்றனர்.
மற்றைய விடயம் முஸ்லிம் எதிர்ப்பு. மாளிகாவத்தையை காஸாவாக மாற்ற முயற்சித்தால், தாம் இஸ்ரேலாக மாற தயார் என ஒருவர் கூறியிருந்தார். அவர் மாளிகாவத்தை மக்கள் மீது குண்டுகளை வீச போவதாக கூறுகிறார்.
இவை திடீரென நடக்கும் விடயங்கள் அல்ல. பாதுகாப்பு அமைச்சில் இஸ்ரேலின் ஆதரவாளர்கள் இருக்கின்றனரா என்பதை ஜனாதிபதி தேடிப்பார்க்க வேண்டும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவான இனவாதம் செயற்பட்டு வருகிறது என்பது கலாநிதி தயான் ஜயதிலக்கவின் இந்த கருத்துக்கள் மூலம் தெளிவாகியுள்ளது.
நாடு முழுவதும் முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக சித்தரித்து நாட்டில் பெரும் இன அழிவை ஏற்படுத்த சில மாதங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு அரச புலனாய்வுப் பிரிவின் அனுசரணை இருந்தது என்பது இரகசியமான விடயமல்ல.
தயான் ஜயதிலக்க கூறியது போல், அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தது ஜனாதிபதியின் சகோதரர்களான இரண்டு அமெரிக்க பிரஜைகளில் ஒருவராக இருக்கலாம்.
பசில் ராஜபக்ஷ மற்றும் கோத்தாய ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட இனவாத மற்றும் மத வாத சம்பவங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கோத்தபாய ராஜபக்ஷவே தயான் ஜயதிலக்கவை அச்சுறுத்தியிருக்க வேண்டும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjo3.html
Geen opmerkingen:
Een reactie posten