[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 08:56.23 AM GMT ]
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாலிகா வித்தியாலத்திற்குள் முஸ்லிம் பெற்றோர் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கப்படாமைக்கு எதிராக பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர் குழுவின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தமது கலாசார உடைகளை அணிவது பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமை என பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பொது பாடசாலைகளிலும் முஸ்லிம் பெற்றோர் ஹிஜாப் அணி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹஜாப் அணிந்து பாடசாலைக்கு சென்ற போது, பாடசாலை அதிபர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என மனுதாரான பெற்றோர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இதே பாடசாலை அதிபர் அங்கு பயிலும் இரண்டு முஸ்லிம் மாணவிகள் அணிந்து சென்ற பஞ்சாபி உடையை அணிந்து பாடசாலைக்கு வரக் கூடாது என அறிவித்திருந்தார்.
இது தொடர்பான வேறு ஒரு அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjo1.html
புலிகளே போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று கருத்துரை வழங்கியவர் தான் டெஸ்மன் டி சில்வா
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 10:17.49 AM GMT ]
கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம், இலங்கை இராணுவத்தினரால் கொழும்பில் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு ராணி சட்டத்தரணியான டெஸ்மன் டீ சில்வா கருத்துரை வழங்கியிருந்தார். அவர் தனது கருத்துரையில்,
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தலைவரான தருஸ்மன் அறிக்கை உண்மைகளைக் கண்டறியவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
போர் நடைபெற்ற போது 3 லட்சம் பொதுமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் யாராவது தப்பிச் செல்ல முற்பட்டால் புலிகள் சுட்டு படுகொலை செய்தனர். எனவே விடுதலைப் புலிகள்தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு எந்தவொரு நாட்டிலும் நடந்ததில்லை.
பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையின் போது,உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் இலங்கை அரசு இராணுவச் சட்டத்தின் பிரகாரமே அந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த விடயங்களில் தருஸ்மன் அறிக்கை கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று டெஸ்மன் டீ சில்வா தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு கருத்து வெளியிட்ட நபரே காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjo6.html
Geen opmerkingen:
Een reactie posten