தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும்: நளினி மனு!

தகாத உறவால் குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்த மனைவி: கத்தரியால் குத்திய கணவன்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 06:27.36 AM GMT ]
தன்னுடைய கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு மறுத்த மனைவியை அவரது கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பேருவளைப் பிரதேசத்தில் இடம்பெறுள்ளது.
கணவனின் தாக்குதலால் கடும் காயங்களுக்கு உள்ளான மனைவி, பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு நேற்று பகல் சென்ற கணவன் வைத்தியசாலையில் வைத்தே மனைவியை மீண்டும் கத்தரியால் ஐந்து இடங்களில் குத்தியுள்ளார்.
சந்தேகநபரான அந்த பெண்ணின் கணவன் முச்சக்கரவண்டியின் சாரதி என்பதுடன் அவர், கத்தரியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண் வேறொருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அதனால் தன் கணவன் மற்றும் குழந்தையை வேறுபடுத்தி பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி தன்னுடைய குழந்தைக்கும் பால் கொடுப்பதற்கு மறுத்துள்ளார். அதன்போதே கணவன் தனது மனைவியை தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
காயமடைந்த மனைவி பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக தன்னுடைய ஒருவயதும் மூன்று மாதங்களேயான குழந்தையை தூக்கிக்கொண்டு கணவன், வைத்தியசாலையிக்கு நேற்று காலை சென்றுள்ளார்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்குமாறு கணவன் கேட்டபோதும் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தையை தூக்கிகொண்டு கணவன் வீட்டுக்சென்றுவிட்டார்.
வீட்டுக்சென்ற அவர், பகல் சாப்பாட்டு சமைத்து எடுத்துகொண்டு குழந்தையும் தூக்கிக்கொண்டு மனைவியை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது சாப்பாட்டை ஏற்பதற்கு மறுத்த அந்தபெண், தன் குழந்தைக்கும் பால் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த சந்தேகநபரான கணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மனைவியை ஐந்து இடங்களில் குத்தியுள்ளார்.
அந்த பெண் தன்னுடைய கள்ள புருஷன் கொடுத்த உணவை உட்கொண்டதால் கணவனின் சாப்பாட்டை ஏற்க மறுத்து விட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


நீதி கோரி வித்தியாசமான போராட்டத்தை மேற்கொண்ட நபர்!- கண்டியில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 06:44.07 AM GMT ]
பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான வாகனத்தில் சென்றவர்கள் தனது மகளை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தந்தை ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்.
கண்டி தலதா வீதிக்கு தனது காரில் வந்த இந்த நபர் கார் மீது ஏறி நின்றவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடுகண்ணாவ பிரதேசத்தை சேர்ந்த வில்பட் தயானந்த என்ற நபரே இந்த வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான வாகனத்தில் வந்த சிலர் தனது 25 வயதான மகளை கடத்திச் சென்றதாகவும், அது குறித்து கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் தயானந்த கூறியுள்ளார்.
2ம் இணைப்பு
பிரதமர் அலுவலக வாகனத்தில் கடத்தப்பட்ட யுவதி எங்கே?: தந்தை இன்று போராட்டம்
பிரதமர் டி.எம். ஜயரட்னவின் அலுவலக வாகனத்தில் யுவதியொருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது மகளை பிரதமரின் வாகனத்தில் கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு கண்டி நகரில் நபரொருவர் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.
கடந்த 29ம் திகதி 25 வயதான தமது மகளை பிரதமரின் அலுவலக வாகனத்தில் கடத்திச் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 29ம் திகதி முதல் மகள் பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்காத காரணத்தினால் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மகளை தேடிக் கண்டுபிடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடுகன்னாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை வீதியில் மேற்கொண்ட போராட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாதகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த யுவதி வேறொரு ஆண் ஒருவருடன் சென்றிருப்பதாகவும் இது ஓர் தனிப்பட்ட பிரச்சினை எனுவும் கண்டி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.என்.பீ. அம்பன்வல தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் திருமணம் முடித்துள்ளதாகவும் கணவருடன் அவர் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும்: நளினி மனு!
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 07:04.26 AM GMT ]
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறும்போது,
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 2,200 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நளினி உள்பட பலர் சி.பி.ஐ. விசாரித்த காரணத்தால் விடுதலை செய்யப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றது.
இந்நிலையில், நளினி சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பிரிவை நீக்கினால், சி.பி.ஐ. விசாரித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம்.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வருகின்ற 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjt1.html

Geen opmerkingen:

Een reactie posten