தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 juli 2014

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு

பிரச்சினைகளை மறைப்பதற்காக அரசாங்கம் அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது!- ஜே.வி.பி
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 12:17.19 PM GMT ]
அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக சில அமைப்புகளை பயன்படுத்துவதாகவும், கண்டியில் கார் பந்தயத்தை நடத்த வேண்டாம் என மாநாயக்க தேரர்கள் கோரிய போதும் அரசாங்கம் அதனை நிறுத்தவில்லை எனவும் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் பொதுபல சேனா இயங்கி வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் உள்ள சிலரது ஆதரவு அந்த அமைப்புக்கு கிடைத்து வருகிறது.
அதேவேளை நாட்டின் சுகாதார சேவையில் பாரதூரமான நெருக்கடி உருவாகியுள்ளது. தாதி மற்றும் குடும்ப சுகாதார ஊழியர்கள் இடையிலான நிர்வாக ரீதியான பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்காததே இந்த நெருக்கடிக்கு காரணம்.
குருணாகல், பேராதனை வைத்தியசாலைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டதுடன் தற்போது ராகம வைத்தியசாலையில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்கள் சுதந்திரமான மனநிலையில் தமது தொழிலில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கடும் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத வறிய நோயாளிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkt4.html
ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 12:57.49 PM GMT ]
ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இன்று மாலை 4.00 மணிக்கு முன்னதாக மாணவர்கள் வெளியேற வேண்டுமென பல்கலைககழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகத்தை கால வரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் அளிக்கப்படும் வரையில் பணிகளை தொடர முடியாது என விரிவுரையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
அண்மையில் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்களை பணயமாக வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkt6.html

Geen opmerkingen:

Een reactie posten