தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 juli 2014

தொலைபேசி மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை!– ஞானசார தேரர் - ராஜித சேனாரட்னவிற்கு விசர்!– ஞானசார தேரர்

குருக்கள்மடம் புதைகுழி: பிரதேச மக்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 03:47.44 PM GMT ]
மட்டக்களப்பு, குருக்கள் மடத்தில் உள்ளதாக கூறப்படும் புதைகுழி தொடர்பில் பிரதேச மக்களிடம், களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைகள் காத்தான்குடி பிரதேச சபையில் விரைவில் இடம்பெறவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன், பிரதேச மக்களிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
1990ம் ஆண்டு காத்தான்குடியைச் சேர்ந்த 165 பேர் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள புதைகுழியை கடந்த 1ம் திகதி தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம். றியாழ் கடந்த ஜுன் மாதம் 23ம் திகதியன்று களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும், தோண்டுவதற்குரிய ஏற்பாடுகள் இல்லாததாலும் சட்டவைத்திய நிபுணர் கொழும்பிலிருந்து உரிய இடத்திற்கு சமுகமளிக்க வேண்டும் என்பதாலும் தோண்டுவதற்குரிய உபகரணங்கள் மற்றும் ஆட்கள் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால், அதற்கு கால அவகாசம் தருமாறு கோரி,கடந்த 1ம் திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.
இதை ஆராய்ந்த நீதிபதி ஏ.எம். றியாழ், ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியன்று உரிய புதைகுழியை தோண்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjwy.html

தமிழர் பிரதேசங்களிலே அதிக மதுபானக் கடைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது: த.கலையரசன்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 04:35.17 PM GMT ]
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் பல இன்றும் எந்தவித அபிவிருத்தியும் காணாத நிலையிலேயே உள்ளதாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இன்று திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு, அம்பாறை மாவட்டத்தின் அலிக்கம்பை கிராமத்திற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா ஆகியோர் சென்றிருந்தனர்.
அக்கிராமத்திற்கான தற்கால நிலைகள் பற்றியும் உடனடித் தேவைகள் அதற்கான உரிய வழிகள் பற்றியும் ஆராய்ந்து அதிகாரிகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தி நிலைமைகளை விளங்கி தீர்வுகளை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்ததோடு, தற்போது அக்கிராம அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும் த.கலையரசன் மேற்கொண்டார்.
இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
பெற்றோர்கள், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில் மிக கவனம் எடுக்க வேண்டும். வறுமையை முன்னிலைப்படுத்தி கல்வியில் இருந்து விலகக் கூடாது.
பெற்றோர்கள் நினைத்தால் வறுமை இருக்காது சில பெற்றோர்கள் தங்களது வருமானத்திற்கு மேலாக மதுவில் நாட்டம் செலுத்தி கடனாளி ஆகின்றனர் அவர்களாக உணர்ந்து மதுவை மறந்தால் வறுமை எங்கோ தொலைந்து விடும்.
எமது இனம் கடந்த காலங்களில் தொடர்ந்து அழிவுகளையே சந்தித்து வந்துள்ளது. தற்போது மதுபானக் கடைகளுக்கான அனுமதியினை அரசாங்கம் வழங்குகின்ற போது தமிழர்கள் வாழும் இடங்களையே தெரிவு செய்து வழங்குகின்றது.
முழு நாட்டையும் ஒப்பிடுகின்ற போது மதுபானக் கடைகள் கூடுதலாக உள்ள இடம் மட்டக்களப்பு என்பது பதிவாகி உள்ளது.
இதன் உள்நோக்கம் தொடர்ந்தும் எம்மை அடிமைகளாக வைத்திருக்க வேண்டுமென்பதோடு, தமிழர்களின் பொருளாதாரத்தினை சிதைத்து கல்வியில் பின்தள்ள வைப்பதன்மூலம் மேலும் ஒரு இருண்ட யுகத்திற்கு தமிழினத்தினை கொண்டு செல்ல முடியும் என்பது அவர்களினது மற்றுமொரு திட்டமாகும் எனவும் எண்ணத்தோன்றுகின்றது. 
இன்று எமது மக்கள் வாழ்கின்ற எத்தனையோ கிராமங்கள் அது வடக்காக இருந்தாலும் சரி கிழக்காக இருந்தாலும் சரி அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, கல்வி எல்லாவற்றிலுமே பின்தங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலை முழுமையாக மாறவேண்டும். அதற்கான காலம் மாறிக் கொண்டு இருக்கின்றது. அபிவிருத்தி என்கின்ற போது முதலில் கிராமங்களிலேயே கவனம் தேவை ஆனால் இவற்றைக் கூட நகர்ப் புறங்களிலேயே செய்வதில் பல அமைச்சர்களும் ஆளுந்தரப்பினரும் அக்கறையாக இருந்து செயற்படுகின்றார்கள்.
எமது கட்சி உறுப்பினர்கள் மட்டுமே கிராமங்களை முன்னிலைப் படுத்துகின்றனர். ஆனால் எமக்கு கிடைக்கின்ற நிதியோ மிகவும் குறைவானது.
நாம் அபிவிருத்திக்காக அரசியல் செய்யவில்லை. எமது மக்களின் நீதியான தீர்வை நோக்கியதாகவே எமது அரசியல் பயணம் தொடரும். அதற்காக நாம்அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இக்கிராமத்தில் உள்ள பாடசாலையில் 287 மாணவர்கள் கல்வி கற்றுவருவதாக அதிபர் அவர்கள் குறிப்பிட்டதுடன், பாலர் பாடசாலை ஒன்றின் தேவை பற்றியும் ஒரு ஆசிரியை குறிப்பிட்டிருந்தார்.
இன்று உங்கள் பாடசாலைக்கு சமூகமளித்த போது சில குறைகள் தெரிவிக்கப்பட்டது அதில் குடிநீர் பிரச்சனை முக்கிமானதாக தெரிந்து நடவடிக்கை எடுக்க முடிந்தது. இங்கு கிராமத்திற்கான முக்கிய தேவையாக குடிநீர் பிரச்சினை இருப்பதையும் அறியமுடிகின்றது.
இந்த விடயம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வினை பெற்றுத்தருவேன் எனவும் உறுதியளித்ததோடு, அக்கிராம மக்கள் பலருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjwz.html
தொலைபேசி மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை!– ஞானசார தேரர் - ராஜித சேனாரட்னவிற்கு விசர்!– ஞானசார தேரர்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 11:51.50 PM GMT ]
தொலைபேசி வழியான மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இடைக்கிடை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
இதனை நான் சொற்பளவேனும் கவனத்தில் கொள்வதில்லை. அஞ்சியதுமில்லை.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியமன்று என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரட்னவிற்கு விசர் – ஞானசார தேரர்
மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு விசர் பிடித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
புலிகளுடன் தொடர்புகளைப் பேணுவதாக ராஜித தொடர்ச்சியாக சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க சட்டத்தின் உதவி நாடப்படும்.
இந்த சந்திப்பிற்கு ரவி கருணாநாயக்க எதற்காக பணம் வழங்க வேண்டும். ராஜிதவின் இந்தக் குற்றச்சாட்டு முற்று முழுதான ஓர் பொய்யாகும்.
நோர்வேக்கு விஜயம் செய்தமை உண்மை, எரிக் சொல்ஹெய்முடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எனினும் புலிகளுடன் சந்திப்பு நடத்தவில்லை.
ராஜித போன்ற அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்துகின்றனர்.  காலம் முழுவதும் இவர்கள் தங்கள் நடிப்புத் திறமையினால் அரசியல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் ஞானசார தேரர் புலி ஆதரவாளர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜித சேனாரட்ன சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
புலம்பெயர் தமிழர்களில் தேசப்பற்றுள்ள தரப்பிரை சந்தித்து தான் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் தான் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் நோர்வே சென்றது உண்மை. இது அனைவரும் அறிந்த விடயம். எரிக் சொல்ஹெய்முடன் புகைப்படம் எடுத்தோம்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடனும் புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வோம். இதற்கு நாங்கள் எவரிடம் அனுமதிப் பெறவேண்டிய அவசியமில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjw1.html

Geen opmerkingen:

Een reactie posten