இலங்கையில் விளம்பரம் போட்டாராம்: அமெரிக்க தூதுவரை எச்சரிக்கும் இலங்கை !
[ Jul 04, 2014 02:14:58 PM | வாசித்தோர் : 7010 ]
இலங்கைக்கான அமெரிக்க தூதர் மைக்கல் சிசனை இலங்கை அரசு குற்றவாளி கூண்டில் ஏற்றியுள்ளது. இலங்கை அமைச்சரவை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டமைக்கும் இணங்க அமெரிக்க தூதரகம் இவ்வாறு குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது. குடிவரவு நிகழ்ச்சித்திட்டம் எனும் பெயரில் அமெரிக்க தூதரகம் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக விண்ணப்பங்ககளை ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கையில் பத்திரிகையொன்றில் விளம்பரம் போடப்பட்டதாலேயே இந்த நடவடிக்கை என்று தெரிய வருகின்றது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்காவின் இந்த நிகழ்ச்சிதிட்ட செயற்பாடு மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான இந்த செயற்பாட்டிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று பதில் அளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க தூதுவருடன் கலந்தாலோசிப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை போர்க்குற்றமும் அவற்றிற்கு பதில் அளித்தலும் மற்றும் தீர்வு காணுதல் என்ற அமெரிக்க தீர்மானத்தின் பின்னர் இலங்கை- அமெரிக்க அரசியல் உறவில் ஒரு இறுக்கம் காணப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கை 1931 ஆம் ஆண்டில் இருந்து நல்ல உறவு காணப்படுவதாகவும் அவ்வுறவு பற்றி தங்களுக்கு கற்பிக்க வேண்டியதில்லை என்றும் இலங்கை தெரிவித்துள்ளது
http://www.athirvu.com/newsdetail/360.htmlதேரரை நாட்டுக்குள் முடக்க வெளிநாட்டு முஸ்லீம்கள் எல்லா தூதரக வாசலும் ஏறி இறங்குகிறார்கள் !
[ Jul 04, 2014 03:43:29 PM | வாசித்தோர் : 10310 ]
பொதுபல சேனாவின் செயலாயர் கலகொட ஞானசார தேரரின் விசா விண்ணப்பம் பிரித்தானிய குடி வரவு சட்டத்திற்கு இணங்கத்தான் கவனத்தில் கொள்ளப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
தேரரின் அனுமதி மறுக்கப்படுமா என்று பிரித்தானிய பயங்கரவாத மற்றும் சமூக வன்துறை தடுப்பு அமைச்சரிடம் கேட்டபோது – ஹோம் ஒபிஸ் தனிப்பட்ட ரீதியில் ஒருவருடைய விண்ணப்பம் பற்றி கருத்து சொல்வதற்கு இல்லை ஏனெனில் ஹோம் ஒபிஸ் தகவலை இரகசியம் பேணும் முறை உள்ளது என்றார். ஆனால் தேரரிடம் இருந்து கிடைக்கும் விண்ணப்பம் வழமையான முறைகளினூடாகவே பரீசீலிக்கப்படும் என்று உறுதிபட பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் சட்டங்களின் படி சமூகம் ஒன்றில் வன்முறையை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள் மற்றும் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த வகையில் மக்கள் மத்தியில் வன்முறையை கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தவல்ல மேடைபேச்சுக்கள் அதே வகையிலான கருத்துக்களை கொண்ட ஆவணங்களை அல்லது விளம்பரங்களை தயார் செய்தல் போன்ற அனைத்தும் இவற்றினுள் அடக்கப்படும். இதனை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளாது என்றார். ஒருவர் பிரித்தானியாவிற்குள் வருவது என்பது பிரித்தானிய சட்டதிட்டங்களுக்கு அமைய இடம்பெற வேண்டும் என்பது பொருத்தமானதாகும் என்றும் தெரிவித்தார்.
பிற்குறிப்பு: ஹோம் ஒபிஸின் தடைப்பட்டியலில் இடம்பெற வேண்டிய தகுதிகள் அனைத்தும் தேரருக்கு உள்ளது. அவர் வன்முறை பேச்சை பேசியுள்ளார். வன்முறையை தூண்டியுள்ளார். அப்படியானால் அமெரிக்காவை தொடர்ந்து தேரருக்கு பிரித்தானியாவிலும் ஆப்பு கன்பே(ர்)மா ??
http://www.athirvu.com/newsdetail/361.html
Geen opmerkingen:
Een reactie posten