[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 02:54.53 PM GMT ]
தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வாக்குரிமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அரச சார்பற்ற அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பாக தகவல்களைப் பெறும் நோக்கிலேயே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்காவின் சர்வதேச நிதியுதவி வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டின் அரச சார்பற்ற அமைப்பொன்றிற்கு 190 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, கலந்துரையாடியதுடன் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை அழைத்து இதற்கான எதிர்ப்பினை வெளியிட தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.
வாக்காளர் கல்வி ஊடாக தேர்தல் ஒத்துழைப்பு' என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த விரும்பும் சிவில் அமைப்புகள் தங்களின் யோசனைகளை முன்வைக்குமாறு யுஎஸ்எயிட் நிறுவனம் வெளியிட்டிருந்த பத்திரிகை விளம்பரத்தை அடுத்து, அதற்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.
இந்த சூழ்நிலையில், சிவில் அமைப்புகளுக்கு இன்று வௌ்ளிக்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ள யுஎஸ்எயிட் நிறுவனம், குறித்த நிகழ்ச்சித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjv6.html
ஐநா விசாரணையை குழப்பும் விதத்தில் தென்னாபிரிக்க குழுவின் விஜயம் அமையக்கூடாது!- சண்.குகவரதன்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 03:42.52 PM GMT ]
தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு ‘சர்வதேச விசாரணை’ நீதியை பெற்றுக் கொடுக்கும் என்பதில் அசையா நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர். இதுவே அவர்களின் இறுதியும் அறுதியுமான எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,
யுத்தம் முடிந்து 5வருடங்கள் கழிந்துவிட்ட பின்பும் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகள், வேதனைகளுக்கு இலங்கை அரசாங்கம் நியாயத்தை பெற்றுக்கொடுக்கவில்லை. சர்வதேச நகர்வுகளும் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கவில்லை.
இவ்வாறானதொரு நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விடாமுயற்சியால் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் நீதி கிடைப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகும். எனவே இவ் விசாரணையில் தமிழ் மக்கள் வாஞ்சையுடன் இருக்கின்றனர்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான குழு இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு இங்கு வருவது சர்வதேச விசாரணைக்கு பாதகமாக அமைந்துவிடக்கூடாது.
சிங்களக் கடும்போக்குச் சக்திகள் இக் குழுவின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
மறுபுறம் சர்வதேச தலையீடுகளுக்கு இங்கு இடமில்லை என மார்தட்டும் அரசாங்கம் வெற்றிலை பாக்கு வைத்து இக்குழுவை வரவேற்பதும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
எதிர்ப்புக்காட்டி தென்னாபிரிக்க குழுவை வரச்செய்து சர்வதேச விசாரணையை முடக்குவதற்கும் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை தட்டிப்பறிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற கோணத்திலும் சந்தேகம் கிளம்புகிறது.
எது எப்படியிருப்பினும் தென்னாபிரிக்க குழு தமிழ் மக்களின் பறிக்கப்பட்டுள்ள அரசியல் ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி இலங்கையின் விஜயத்தை அதற்காக பயன்படுத்த வேண்டும்.
அது வெறுமனே இருதரப்பு பேச்சுவார்த்தைகளாக மட்டுமே இருக்கக்கூடாது. ஆக்கபூர்வமான நடைமுறை சாத்தியமானதாக அமையவேண்டும்.
அத்தோடு எந்த விதத்திலும் இக்குழுவின் விஜயம் ஐ.நா சர்வதேச விசாரணைக்கு பாதிப்பையோ அல்லது முற்றுப்புள்ளி வைப்பதாகவோ அமைந்துவிடக்கூடாது.
வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைப்பதாக இந்த விஜயம் அமைந்துவிடலாகாது.
இன அடக்குமுறை என்றால் என்ன, அதன் கொடுமை வடுக்கள் என்னவென்பதை தென்னாபிரிக்க கறுப்பினத் தலைவர் நன்கறிவார்.
எனவே தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படுவதை அவர்கள் இடமளிக்க மாட்டார்களென நம்புகின்றோம். தென்னாபிரிக்கா தனது கடப்பாட்டை செய்யாவிட்டால் அது மன்னிக்க முடியாத தவறாக வரலாற்றில் பதியப்படும் என்றும் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjv7.html
Geen opmerkingen:
Een reactie posten