ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு…
பிரித்தானிய சட்ட வல்லுனரான சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக் குழுவிற்கு மாற்றீடாக ஜனாதிபதி இந்த நிபுணர் குழுவினை நியமித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது சொந்தக் கொள்கையை மீறும் வகையிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிபுணர் குழுவினை நியமிப்பது குறித்து தமது கட்சியிடம் அறிவிக்கவோ அல்லது கருத்துக்களை கோரவோ இல்லை என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிபுணர் குழுவின் நியமனத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உள்விவகாரங்களில் எந்தவகையிலான சர்வதேச தலையீட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77031.html
மத வழிபாட்டு முறைகளை மாற்ற நீதிமன்றத்திற்கு உரிமையில்லை…
இவ்வாறான ஓர் பின்னணியில் உச்ச நீதிமன்றினால் கூட மத வழிபாட்டு விவகாரங்களில் உத்தரவுகளை பிறப்பி;க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வரம் ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் மிருக பலி பூஜைகளை தடை செய்யுமாறு கோரி சில அமைப்புக்கள் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பிலான விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜாதிக சங்க சம்மேளனம் மற்றும் மிருக வதைகளை ஒழிக்கும் அமைப்பும் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை, மிருக பலி பூஜைகளின் போது சில விடயங்களைக் கருத்திற் கொள்ளுமாறு பிரதம நீதியரசர் ஆலய பரிபாலன சபையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மிரு பலி பூஜைக்கான மிருகங்களின் எண்ணிக்கையை வரையறுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பொதுவாக மிருகங்களின் எண்ணிக்கையை 300 முதல் 400 ஆக வரையறுக்குமாறு கோரியுள்ளார். பொதுமக்கள் பார்வையிடும் திறந்த வெளியில் ஒரே தடவையில் அதிகளவான மிருகங்களை பலியிடாது, ஒன்றன் பின் ஒன்றாக மிருகங்களை பலியிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பிலான இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதே பொருத்தமானத என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் மிருக பலி பூஜைகள் நடைபெற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24ம் திகதி ஆலயத்தில் மிருக பலி பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இந்த வழக்கு எதிர்வரும் 30ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/77034.html
கிளிநொச்சி திருவையாற்றில் 15ஏக்கர் காணியை சுவீகரிக்கும் திருட்டுத் திட்டம்!
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் பல இடங்களில் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் அடுத்து இறங்க இருப்பதாக தெரிய வருகிறது. கிளிநொச்சியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பலவற்றை இலங்கை அரச படையினர் குறி வைத்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி திருவையாற்று விவசாய கிராமங்களை தமது இராணுவ முகாம் தேவைக்காக இலங்கை அரச படையினர் சுவீகரிக்கும் முயற்சியிர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பட்டியல் ஒன்றை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இராணுவம் கையளித்துள்ளது.
இதன்படி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து நில அளவையாளர்களை திருவையாற்றறுக்குச் சென்று காணிகளை அளவையிடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அறிவித்தல் நோட்டிஸ் மக்கள் நடமாட்டமற்ற பகுதியில் ஒட்டுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படியிருந்தபோதும் எதிர்வரும் சில தினங்களில் அந்தப் பகுதிக்கு அளவையிலாளர்கள் என்று அப்பகுதியை சுவீகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த காணிகள் சுமார் 15 ஏக்கர் பரப்பை கொண்டவை. விடுதலைப் புலிகளின் முகாங்கள் இருந்தன என்று தெரிவத்து அந்தப் பகுதியில் இராணுவத்திரனர் தற்போது முகாமிட்டுள்ளனர்.
அவை மக்களுக்குச் சொந்தமான விவசாய காணிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிவருகின்றபோதும் இராணுவத்தினர் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் தற்போது அவற்றை நிரந்தரமாக சுவீகரிக்க முற்படுவதாக கூறப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/77037.html
Geen opmerkingen:
Een reactie posten