தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கை இனப்படுகொலை பற்றிய ஆவணப்படம்!


இலங்கைக்கு திரும்ப பணம் இன்றித் தவித்த மூதாட்டி
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 07:54.27 AM GMT ]
நாடு திரும்புவதற்கு பணம் இன்றித் தவித்த மூதாட்டி ஒருவர் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் நாட்டுக்கு அனுப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கொழும்பில் வசிக்கும் 70 வயதான மேரி ஜோசப் எனும் மூதாட்டி கண் அறுவைச் சிகிச்சைக்காக விமானம் மூலம் தமிழ்நாடு மதுரைக்கு சென்றுள்ளார்.
அங்கு வந்த அவர் சிகிச்சைக்காக கொண்டுவந்த பணத்தை விட மேலதிகமாக மருத்துவச் செலவு அதிகரித்ததால் அவர் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவழிந்து விட்டது.
இதனால் திரும்பி நாட்டுக்குச் செல்வதற்கு பணம் இல்லாததால் நாட்டில் உள்ள மகளைத் தொடர்பு கொண்டு மூதாட்டி பணம் கேட்ட போது அவர் பணம் வழங்கவில்லை.
உறவினர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதனால் மூதாட்டி மாநகர காவல் ஆணையாளரை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.
மாநகர காவல் ஆணையாளர் இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியனின் உத்தரவின்பேரில், தனி வட்டாட்சியர் சரவணன் மூதாட்டியிடம் விசாரணை நடத்தி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடாக விமான டிக்கெட்டை எடுத்துக் கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLcko7.html


மேல் மாகாண முதலமைச்சர் கிரிக்கெட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 08:49.20 AM GMT ]
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கிரிக்கெட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் குறித்த நபரிடம் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
பிரசன்ன ரணதுங்க நேற்று மாலை சில நபர்களுடன் வந்து கிரிக்கெட் மட்டையில் தம்மைத் தாக்கியதாக முறைப்பாடு செய்துள்ளார்.
மெல்வத்த நாவல கொஸ்வத்தை என்னும் முகவரியைச் சேர்ந்த 69 வயதான எ.எம். பியசேன என்பவரே இது தொடர்பிலான முறைப்பாட்டை செய்துள்ளார்.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckpy.html
தந்தையை கொலை செய்தவர்களுக்கு போதைப் பொருளுடன் தொடர்பு: ஹிருனிகா
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 09:05.24 AM GMT ]
தந்தையை கொலை செய்தவர்களுக்கு போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகளான மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தந்தையை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பதனை நான் ஆரம்பம் முதலே கூறி வருகின்றேன்.
கொலன்னாவ பிரதேசத்தில் யார் போதைப் பொருள் விற்பனை செய்கின்றார்கள் என்பதற்கு சாட்சியங்கள் உண்டு.
நான் இதனை மிகவும் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.
100 கிலோ கிராம் போதைப் பொருள் என்பது பாரியளவிலான தொகையாகும் யாரை இவர்கள் அழிக்கப் பார்க்கின்றார்கள்? இந்த நாட்டின் இளைய சமூகத்தினரையே அழிக்க முயற்சிக்கின்றனர்.
போதைப் பொருள் பற்றி பேசிய காரணத்தினால் தந்தை கொல்லப்பட்டார், உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை வருத்தமளிக்கின்றது என ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


http://www.tamilwin.com/show-RUmsyHRWLckp1.html


Photo
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கை இனப்படுகொலை பற்றிய ஆவணப்படம்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 07:54.17 AM GMT ]
இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஏழாவது சர்வதேச ஆவண- குறுந்திரைப்பட விழா கடந்த ஜூலை 18 முதல் நடை பெற்று வருகிறது.
இதில் நெடும் ஆவணப்பட போட்டிப் பிரிவில் பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் இலங்கை இனப்படுகொலை பற்றிய “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது” தெரிவாகியுள்ளது.
இதையடுத்து இப்படம் நேற்று மாலை (ஜூலை 21) கைராலி திரையரங்கில் திரையிடப்பட்டது.
2009 போருக்கு பிறகு பெருமளவில் இலங்கையின் வடக்கு- கிழக்கில் நடந்து வரும் நில அபகரிப்புகளை பற்றியும் இராணுவமயமாக்கலை பற்றியும் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது பதிவு செய்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten