தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 april 2014

பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை சரியானதே � TRAC !

பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை சரியானதே பயங்கரவாத ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கடும்போக்குடைய மதவாதக் கொள்கைகளை இந்த அமைப்பு முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது, இது தொடர்பிலான வீடியோ மற்றும் ஏனைய ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், சிறுபான்மையினத்தவரின் கடைகள் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைப்புக்களை அடையாளம் கண்டு அவற்றை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துள்ளதாகவும், இதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
18 Apr 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1397807639&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten