[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 11:48.42 PM GMT ]
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 424 பேரின் பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு அண்மையில் வர்த்தமானியில் அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 200வது இடத்தில் ஐஸ் மஞ்சு என்ற பாதாள உலக் குழு உறுப்பினரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை லிங்க நகரைச் சேர்ந்த சமிந்த தர்சன எனப்படும் ஐஸ் மஞ்சுவை அரசாங்கம் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துள்ளது.
இவர் தற்போது தென் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்க்பபடுகிறது.
இதேவேளை, 351வது இடத்திலும் சிங்களவர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு முதல் இன்டர் போலினால் தேடப்பட்டு வரும் குணரட்ன பந்துல கஜவீர என்பவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWev3.html
அமெரிக்க பிரேரணை! அரசாங்கத்தின் கொள்கையையே அனைவரும் பின்பற்ற வேண்டும்!- ஜனாதிபதி உத்தரவு
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 11:31.56 PM GMT ]
தேர்தல் பெறுபேறுகளை ஆய்வு செய்யும் கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான விசாரணைக்கான கோரிக்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அண்மையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இது தொடர்பிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜெனீவா பிரேரணையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
இந்த நிலைப்பாட்டையே அரசாங்கத்தில் உள்ள ஏனைய கட்சிகளும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWev1.html
சர்வதேச விசாரணை குழுவின் முன் சாட்சி வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!- இலங்கை அரசு எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 11:37.36 PM GMT ]
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்காக எதிர்வரும் வாரங்களில் நவநீதம்பிள்ளை குழு ஒன்றை நியமிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்வாறான விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த குழுவின் முன்னால் சாட்சி வழங்கவோ, அல்லது ஆதாரங்களை வழங்கவோ யார் முற்பட்டாலும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWev2.html
Geen opmerkingen:
Een reactie posten