தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 april 2014

குளித்த பெண்ணை மறைந்திருந்து பார்த்த கடற்படைச் சிப்பாய் கைது !

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை மறைந்திருந்து பார்த்த கடற்படை சிப்பாய் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டார் என மேலும் அறியப்படுகிறது.

ஒலுவில் கடற்படை முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய உப்புல்குமார என்ற கடற்படை சிப்பாய் முகாமிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை வேலியின் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும், வீட்டில் இருந்து வெளியில் வந்த உறவினர் ஒருவர் கண்டு சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் கடற்படை சிப்பாயை மடக்கிப்பிடித்ததாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடற்படை அதிகாரிகள் உடனடியாக சென்று குறித்த கடற்படை சிப்பாயை முகாமிற்கு கொண்டு சென்றனர். இந் நிலையில் பிரதேச மக்கள் குறித்த கடற்படை சிப்பாய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு படைமுகாமுக்கு முன்னால் ஒன்றுதிரண்டு டயர்கள் எரித்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது. குறித்த கடற்படை சிப்பாயை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிசார் கைது செய்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர் என்று மேலும் அறியப்படுகிறது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6701

Geen opmerkingen:

Een reactie posten