தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 april 2014

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி செயற்படும்!- கமரூன்



வாழைச்சேனையில் ஐந்து கைக்குண்டுகள் மீட்பு
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 03:09.55 PM GMT ]
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் இரு வேறு பகுதிகளில் ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோராவெளி வீதி, வாழைச்சேனையைச் சேர்ந்த நா.கருணாநிதி என்பவரின் வளவினுள் புதிதாக மலசலகூடம் கட்டுவதற்கான குழி வெட்டும் பணியில் தொழிலாளர்கள் இன்று சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மர்மப்பொருள் ஒன்று காணப்பட்டது. அதனைத் திறந்து பார்த்த போது, நான்கு கைக்குண்டுகள் இருப்பதைக் கண்டு, இதுதொடர்பில் வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்தே குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிண்ணயடி கிராம சேவகர் பிரிவில் கல்லடி மூலை என்ற இடத்தில் ஆற்றங்கரையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குண்டொன்று இருப்பதைக் கண்ட பொது மக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அக் குண்டை செயலிழக்கச் செய்தனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWfwy.html
இலங்கை மீது சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி செயற்படும்!- கமரூன்
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 01:10.02 AM GMT ]
இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார்.
தம்மைப் பொறுத்தவரை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமானவை என்று கமரூன் சுட்டிக்காட்டினார்.
இந்த நடைமுறைகளே இலங்கை காத்திரமான இடம் ஒன்றை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றும் கமரூன் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது தாம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் யோசனைக்கு ஆதரவை கோரியதாக கமரூன் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWft2.html

Geen opmerkingen:

Een reactie posten