தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

கெற்பேலி கடற்கரையில் எலும்புகளைக் கண்டு அலறியடித்து ஓடிய இராணுவம்

பொதுமக்கள் காணிகள் கட்டடங்கள் அபகரிக்கப்படுவதற்கு ஈபிடிபி துணை

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடனேயே அரச காணிகளும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உறவுகளது காணிகளும் சுவீகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிசாந்தன் மேலும் தெரிவிக்கையில் யாழ்.நகரிலுள்ள நவீன சந்தை மலசலகூடங்கள் மீது அமைக்கப்படும் கடைகள் பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலென்டினிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அதனை மாநகரசபை உறுப்பினர்களான சுபியான் மற்றும் சரத் உள்ளிட்ட மூவருக்கு வழங்கியுள்ளார். இதனை தடை செய்வதாக யாழ்.மாநகரசபை தடைவிதித்து அறிவிப்புக்களை ஒட்டியுள்ள போதும் அதையும் மீறி நகரில் சட்டவிரோதமாக இப்புதிய கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அமைச்சரின் அனுசரணையுடனான இத்தகைய நடவடிக்கைகளினை கண்டுகொள்ளாத யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா கொழும்பில் ஒழித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். நவீன சந்தைக்கடைத் தொகுதியில் புதிய கடைகள் இரவோடு இரவாக அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து இதனை நிறுத்துமாறு அறிவுறுத்தி மாநகர ஆணையாளரினால் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்தும் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனை யாரும் தடுக்க முடியாதென்று கடைகளை அமைக்கின்றவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகர சபையின் இத்தகைய செயற்பாட்டினால் நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாநகர நிர்வாகத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வர்த்தகர்களது ஆதரவுடன் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் நிசாந்தன் மேலும் தெரிவித்தார்.
நிசாந்தனின் குற்றச்சாட்டு தொடர்பில் ஈபீடீபீ பதில் அளிக்குமாயின் அந்தப் பதில் முழுமையாக பிரசுரிக்கப்டும்.
http://www.jvpnews.com/srilanka/65106.html

கெற்பேலி கடற்கரையில் எலும்புகளைக் கண்டு அலறியடித்து ஓடிய இராணுவம்

கெற்பேலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள் இன்று துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் எலும்புக் கூடுகள் இருப்பதை கண்ணுற்றுள்ளனர். அத்தோடு மனித உடல்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து அப்பகுதி எங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும் பிரதேச செயலகத்திற்கும் காணி உரிமையாளர்கள் அறிவித்தனர். தகவல் அறிந்து படை அதிகாரிகள் படையெடுத்ததுடன் விடயத்தை மூடி மறைக்க துரித கதியில் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் சிறிநிதி நந்தசேகரன் மற்றும் சட்டவைத்திய அதிகாரி சிவரூபன் ஆகியோர் குறித்த எலும்புக் கூடுகள் மனிதனுடையவை அல்ல மாடுகளினுடையதென உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு அவர்கள் விட்டகன்றனர். தமது கடந்த கால புதைகுழியொன்று தான் அகப்பட்டுவிட்டதோ என படைதரப்பு பதைபதைப்புடன் அலைந்து திரிந்துள்ளது.
முன்னைய முன்னரங்க பகுதிகிளில் கட்டாக்காலியாக விடப்பட்ட மாடுகள் இரவு வேளைகளில் நடமாடிய போதும் காவலரண் துப்பாக்கிகளிற்கு அவை கூட தப்பித்திருக்கவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/65113.html

Geen opmerkingen:

Een reactie posten