இந்நிலையில் அவரின் செயற்திட்டங்களில், இலங்கை தொடர்பான மனித உரிமை விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை சமந்தா பவரின் நியமனம் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்று அவர் வெற்றிபெறுவார் என நம்பப்படுகின்றது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த ஆண்டு மார்ச் கூட்டத்தொடரின் போது, சிறிலங்கா விவகாரத்தை ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தனது இறுக்கமான போக்கை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, தனது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சில நாடுகளை அடிபணிய வைக்க, மனித உரிமை விடயங்களை வைத்து மிரட்டும், இல்லாவிட்டால் நேரடியாக களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten