[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 07:22.03 AM GMT ]
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் கட்டிடத்தொகுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று வெள்ளைவத்தை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் லேக் வீதியில் தபால் திணைக்களத்துக்கு அருகிலுள்ள பப்ளிக் கிளப் கட்டடம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு உரியதாகும்.
இந்த கட்டடத்தினை அரசசார்பு கட்சியொன்று தமது அலுவலகமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த சில நாட்களாக அங்கிருக்கும் பொருட்களை அகற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.
அரசாங்க ஊழியர்களின் பொழுதுபோக்கு இடமாகவுள்ள அந்த அரச கட்டடத்தினை கட்சியொன்றின் பாவனைக்காக அபகரிக்க முயல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.ஆனால் அங்கு ஜனாதிபதியின் செயலகத்தின் கிளை அமைப்பதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வேறு அரசியல் கட்சி எதற்கு அது வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
அந்த பகுதியில் பாடசாலைகள், பிரதேச செயலகம் மற்றும் தபாலகம் உட்பட பல அரச நிறுவனங்கள் உள்ளன.தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதிக்கு சென்று தமது தேவைகளை நிறைவு செய்து வருகின்றனர்.
அந்த பகுதியில் ஜனாதிபதி செயலகம் அமைக்கப்படுவதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு அது பொதுமக்களுக்கு இடைஞ்சலையேற்படுத்தும் என்பதை அவரிடம் சுட்டிக்காட்னேன்.
இந்த விடயம் தொடர்பில் பரிசீலிப்பதாக அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
எனினும் அந்த கட்டடம் அரசியல் கட்சியொன்றினை சேர்ந்த மட்டக்களப்பு அமைப்பாளரின் அலுவலகத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
அவ்வாறு அரசியல் கட்சியொன்றுக்கு அரசாங்க அலுவலக கட்டிடத்தினை ஒப்படைப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் அவற்றினை தடுத்து நிறுத்துமாறும் அரசாங் அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட ஐவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 08:22.39 AM GMT ]
புதியகடை இலக்கம் 3 நீதிமன்று வழங்கிய அனுமதியின்படி நேற்றிரவு வெள்ளவத்தை பொலிஸாரினால் முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், இரு ஆண்கள் மற்றும் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் ஹெய்ன்துட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று புதியகடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten