[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 04:41.32 AM GMT ]
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இப்பெண்ணின் தலை மயிர், பெண்ணின் அணிகலன்கள், கறுப்பு நிறச் செருப்புக்கள், ஆடைகள் உள்ளிட்ட பலவும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பெண்ணின் செருப்பில் செம்மண் ஒட்டியிருப்பதாலும் அவரது ஆடை ஆணிகலன்கள் சிதறி இருப்பதாலும் அவர் கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய பொருட்கள் யாவும் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இராணுவக் காவலரணுக்கு அண்மையில் இருந்து இவை மீட்கப்பட்டதால் இந்த கொலையின் பின்னணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
பெண்ணின் தலைமயிரின் தன்மையினைக் கொண்டு குறித்த பெண் மிக அண்மையிலேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
யாழ்.புத்தூர் பகுதியில் இராணுவக் காவலரணுக்கு அருகிலிருந்து எலும்பு கூடாக மீட்கப்பட்ட இளம் பெண் பாலியல் வல்லுறவின் பின்னரே கொலை செய்யப்பட்டிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ்.சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் உடமைகள் அங்காங்கே சிதறியிருப்பது இதனை உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ள சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைகளின் பின்னரே இதனை உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்றார்.
இதேவேளை குறித்த பெண் கடத்திக் கொண்டுவரப்பட்டதற்கான ஆதாரமாக மீட்கப்பட்ட செருப்பில் செம்மண் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மட்டு. பெரியபோரதீவில் மனித எலும்புக்கூடு மீட்பு
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரதீவுப்பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் காணால் போன ஒருவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மனித எச்சத்தில் காணப்பட்ட உடைகளைக்கொண்டு காணாமல்போனவர் கோவில்போரதீவை சேர்ந்த தங்கராசா பேரானந்தம் (73வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போனவரின் மனைவியே குறித்த உடைகளைக்கொண்டு காணாமல்போனவரை அடையாளம் காட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணமல்போனவர் இப்பிரதேசத்தின் பிறப்பு இறப்பு பதிவாளராகவும் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட எச்சத்தில் உள்ள மண்டையோடு வெடித்துள்ளதன் காரணமாக அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் மண்டையோட்டினை பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியொன்றினை கண்டெடுத்துள்ள அப்பிரதேச சிறுவன் ஒருவன் அதனை பாவித்துக்கொண்டிருந்தபோது குறித்த துவிச்சக்கர வண்டியை கண்ணுற்ற காணாமல்போனவரின் குடும்பத்தினர் அது தொடர்பில் வினவியபோது துவிச்சக்கர வண்டி கிடந்த இடத்தினை காட்டியுள்ளான்.
இதன்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குளப் பகுதியில் இருந்து இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அப்பகுதிக்கு சென்ற களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ரத்னாயக்க இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten