தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 juli 2013

மகனின் நிலைப்பாடு தொடர்பில் மனம் திறந்தார்! ரமித் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் பதவி விலகத் தயார்!- கெஹலிய

உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 12:45.12 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து போட்டி இன்று Isle of Man இல் வெற்றிகரமாக தொடங்கியது. முதல் போட்டியில் தமிழீழ அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்.
குழு A
4 July 2013 19:30 Sealand V Tamileelam FA
5 July 2013 19:30 Occitania V Sealand
6 July 2013 19:00 Tamileelam FA V Occitania
குழு B
4 July 2013 14:30 St John’s UTD V Raetia
5 July 2013 15:00 Alderney V St John’s UTD
6 July 2013 14:00 Raetia V Alderney
முதல் ஆட்டத்தில் குழு B இல் இருந்து St John’s UTD அணியும் Raetia அணியினரும் மோதினர்.St John’s UTD அணியினர் ஆட்டம் முழுவதும் மேலோங்கி இருந்தனர். Raetia அணியனர் தங்களின் முழு பலத்துடன் போராடியும் இறுதியில் தோற்கடிக்கப்பட்டனர். St John’s தலா 3 goal களை தமதாக்கி போட்டியை வென்றது
இன்று மாலை எமது தமிழீழ அணி Sealand அணியுடன் மோதி இந்தபோட்டியை தொடங்கினார்கள்.
போட்டியில் பங்குபெற்றியவர்களின் விபரம் பின்வருமாறு.
உமேஷ் சுந்தரலிங்கம் (பந்து காப்பாளன் ) 1
சிவரூபன் சத்தியமூர்த்தி (தடுப்பாளன் ) 5
கெவின் நாகேந்திரா (தடுப்பாளன் ) 18
அருண் விக்னேஸ்வராஜா (தடுப்பாளன் ) 6
மதன்ராஜ் உதயணன் (மத்திய விளையாட்டுனர் ) 14
கஜேந்திரன் பாலமுரளி (மத்திய விளையாட்டுனர் ) 15
மஹி நம்பியார் (மத்திய விளையாட்டுனர் ) 10
ரொன்சன் வல்லிபுரம் (மத்திய விளையாட்டுனர் ) 12
பிரஷாந்த் ராகவன் (எல்லை விளையாட்டுனர்) 20 (துணை அணித்தலைவர் )
கவிந்தன் நவநீதகிருஷ்ணன் (எல்லை விளையாட்டுனர்) 9
மஜூரன் ஜெகநாதன் (முன்னேறி விளையாட்டுனர்) 7 அணித்தலைவர்
பனுஷந்த் குலேந்திரன் (முன்னேறி விளையாட்டுனர்) 8
ஷாசில் நியாஸ் (முன்னேறி விளையாட்டுனர்) 4
மக்கள் நினைத்ததை விட எமது அணியினர் மிக உற்சாகமாக தமது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அவர்களின் விளையாட்டு திறமை Isle of Man மக்களும் மற்றும் அனைத்து ரசிகர்களும் மெச்சும் வகையில் போட்டி விதிமுறைகளை மீளாது மிகவும் கண்ணியமாக விளையாட்டை கையாண்டனர்.
இவர்களின் மிரட்டலான பந்து ஆளுமையால் எதிர் அணியினர் திக்குமுக்காடி போனதை கண்டு எமது ரசிகர்கள் பரவசம் அடைந்த காட்சிகள் ஏராளம்.
போட்டி அரை சுற்றில் தமிழ் ஈழ அணி 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் SeaLand அணியினர் 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் கொண்டு இருந்தனர் .
போட்டி இறுதியில் SeaLand அணியினர் 3 உதைபந்தாட்ட இலக்குகளையும் தமிழ் ஈழ அணியினர் 5 உதைபந்தாட்ட இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியை வெற்றிகொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி உள்ளனர்
உதைபந்தாட்ட இலக்கு அடித்த தமிழீழ அணி வீரர்களின் விபரம் வருமாறு
பனுஷந்த் 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் (முதலாவது, இரண்டாவது) மயூரன் 3வது உதைபந்தாட்ட இலக்கையும் மதன்ராஜ் 4வது உதைபந்தாட்ட இலக்கையும் பிரஷாந்த் 5வது உதைபந்தாட்ட இலக்கையும் கைப்பற்றி கொண்டனர்.
எமது அணியின் விளையாட்டு திறனை கண்ட மற்ற அணியினர் எமது அணி வீரர்களை பாரட்டியும் இனி வரும் போட்டிகளில் எமது அணி மிக பெரிய சவாலாக அமையும் என்று கூறி உள்ளனர்.
திரு. Malcom Blackburn, இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மெச்சி சொன்ன வார்த்தைகள் இங்கே "இது வரை நான் இங்கு பார்த்த விளையாட்டு எல்லாவற்றிலும் இன்று தமிழ் ஈழ அணியின் விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது" என்று தெரிவித்தார்.


மகனின் நிலைப்பாடு தொடர்பில் மனம் திறந்தார்! ரமித் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் பதவி விலகத் தயார்!- கெஹலிய
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 12:51.51 AM GMT ]
ரமித் ரம்புக்வெல விடயத்தில் தனிநபர் குழு அமைத்து விசாரணைகள் இடம்பெறுவதால் அதற்குரிய நடவடிக்கையினை அக்குழுவே மேற்கொள்ளும் என அவரது தந்தையும், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தனிநபர் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அது எவ்விதமான தண்டனையாகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது சிறு நீரகமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது ஒரு சிறிய சம்பவமே. இதனை பிரான்ஸிஸ் என்ற பெண்ணே டெய்லி டெலிகிராபிற்கு தெரிவித்திருந்தார். அது குறித்து பிரிட்டிஷ் எயார்வேஷ் சிறிய சம்பவம் என தெரிவித்திருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
மகனின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் பதவி விலகத் தயார் - கெஹலிய
தனது மகன் ரமித் ரம்புக்வெல விமானத்தில் குடித்துவிட்டு குழப்பம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகன் அதிகமாகக் குடித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற "ஏ" கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறையின் கதவு என எண்ணிக் கொண்டு ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவைத் திறக்க முனைந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்தில் ரமித் ரம்புக்வெல குடித்திருந்தார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரச ஊடகச் சந்திப்பில் அரச ஊடகப் பேச்சாளராகக் கலந்து கொண்ட கெஹலிய றம்புக்வெல்ல, தனது மகன் குடித்திருந்ததாகவும், விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகவும் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து உடனடியாக விலகத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த விமானத்திற்குள் செல்லும் முன்னர் தனது மகன் ஒரு கோப்பை "றெட் வைன்" மாத்திரமே அருந்தியிருந்ததாகக் குறிப்பிட்ட கெஹலிய ரம்புக்வெல, இங்கிலாந்தின் ஊடகங்களில் தனது மகன் அதிக மணிக்கணக்காக மதுவருந்தினார் என்று வெளியாகும் செய்திகளை மறுத்தார்.
தன்னையறியாமல் செய்த தவறுக்காக தனது மகன் விமானப் பணியாளர்களிடம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியதாகத் தெரிவித்த கெஹலிய ரம்புக்வெல, அத்தோடு, தனது மகனின் மன்னிப்பை குறித்த விமான சேவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten