[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 08:20.16 AM GMT ]
தமிழத் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து கொண்டு நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றது என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் மூன்று தசாப்த காலங்களுக்குப் பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தத்தைக் காரணம் காட்டி பல தமிழர்கள் பயங்கரவாத, அவசரகால தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
13ம் திருத்தச் சட்டம் மாற்றியமைப்பது குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழக் கோரிக்கைகளை கைவிடவில்லை.
ஈழவாத பாதையிலேயே சுமந்திரன், சம்பந்தன், பிரேமசந்திரன் போன்றோர் பயணிக்கின்றனர்.
இலங்கைக்கு எதிராக இந்தியாவை தூண்டும் பணியில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.
பிரிவினைவாதிகளுடன் பிரிவினைவாதிகள் இணைந்து கொண்டுள்ளனர்.
கூட்டமைப்புடன் ஹக்கீம் கைகோர்த்துக் கொண்டுள்ளார்.
சம்பந்தன் ஹக்கீம் கூட்டணியை தோற்கடிக்க அனைத்து தேசப்பற்றாளர்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
உலகில் கொடுமை தனிமை. அதிலும் கொடுமை சிறையில் இருப்பது! தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை.
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 08:44.20 AM GMT ]
அன்றைய சூழ்நிலையைக் காரணம் காட்டி அரசாங்கம் இந்த கைதிகளின் விடயத்தில் பாராமுகமாக இருந்து வந்தது. இன்றும் அதே போக்கு தொடர்கின்றது. பல வருடங்களாக நீண்டு சென்ற யுத்தத்தினால் சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளின் நிலை கவனிக்கப்படாமல் போனது. இதனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கைதிகளின் சிறைவாச காலமும் நீண்டு சென்றது.
பல வருடங்களாக இவர்கள் அரசாங்கத்தினால் மறக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்தனர். இதனால் இவர்களின் வாழும் காலங்கள் அடைக்கப்பட்ட நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளன.
உலகில் கொடுமையிலும் கொடுமையானது தனிமை. ஒரு மனிதன் சிறையில் அடைக்கப்படும் போது அவன் மனித வாழ்வின் இயல்புத் தன்மையை இழந்து விடுகிறான். ஒரு பரிதாபகரமான நடைப்பிணமாக அவன் மாற்றப்படுகிறான்.
அவன் சுதந்திரமாக நடமாட முடியாது. அவன் செய்யும் எந்த ஒரு சிறுகாரியமும் கூட சிறை அதிகாரிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அவன் தான் விரும்பிய உணவை உண்ண முடியாது. தனது தாய் அன்புடன் குழைத்துக் கொடுக்கும் ஒரு பிடி சோறு கூட அவனுக்கு எட்டாக்கனிதான். தன் குழந்தைகளைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்க முடியாது.
தன் மனைவியுடன் தனிமையில் மனம் விட்டுப் பேசி மகிழ முடியாது. தன் உறவுகளுடனோ நண்பர்களுடனோ கூடிக் குதூகலிக்க முடியாது. அவன் தன் சிந்தனைகளில் ஊறும் நியாய அநியாயங்களைக் கூட வெளியிட முடியாது.
ஒட்டுமொத்தத்தில் அவன் ஒரு சாதாரண மனிதனாக வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. விரக்தியும் ஏமாற்றமுமே அவர்களில் பலரின் வாழ்வாகி விடுகிறது.
தாங்கள் என்ன குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் கூட இதுவரை காலமும் அறியாது சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் இனவாதப் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத, அவசரகால தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் 900 வரையான தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையின் பாரிய சிறைகளில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இதுவரை இவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அரசாங்கம் பாரபட்சம் காட்டாது செயற்பட்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.
இந்த நாட்டின் பிரஜைகளான அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு மேலதிகமான சிறைத்தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டார்கள். தமது குடும்பங்களைப் பிரிந்து பல வருட காலங்களை சிறைகளுக்குள்ளேயே கழித்துவிட்டார்கள். அரசாங்கம் இவர்கள் விடயத்தில் இனியும் பாராமுகமாக இருக்காது விரைந்து செயற்பட வேண்டும்.
ஒரு கொலைக்குற்றத்தை புரிந்த ஆயுள் தண்டனை கைதிக்கு விதிக்கப்படும் சிறைவாச காலத்துக்கும் அதிகமான காலத்தை தமிழ் அரசியல் கைதிகள் அநுபவித்து விட்டார்கள். 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தீர்பின்றியே ஆயுள் கைதிக்கும் அதிகமான சிறைவாசத்தை அனுபவித்து விட்டார்கள்.
இளம் வயதில் கைதாகி சிறை சென்றவர்கள் சுமார் 20 வருடங்களை சிறைக்குள்ளேயே, குறிப்பாக தமது வாழும் காலத்தின் அரைவாசிக்காலத்தை கழித்துவிட்டனர். பெற்றோரை, மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து இவர்கள் தமது வாழ்க்கையை சிறைக்குள் தொலைத்து விட்டார்கள்.
எஞ்சியிருக்கும் மிகுதி வாழ்நாட்களையாவது இவர்கள் தமது குடும்பத்தினருடன் கழிப்பதற்கு ஏதுவாக இவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தத்துக்கு முன்னர் யாரை வேண்டுமானாலும் சந்தேகிக்கலாம். யாரை வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி கைது செய்யலாம் எனும் நிலையிருந்தது.
இந்த அபாயமான சூழலே பல இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையை சூனியமாக்கியிருக்கிறது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 4 ஆண்டுகள் கழிந்த பின்னரும் யுத்தகாலப் பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள் மீது எந்த விதமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாது சிறையில் அடைத்து வைத்திருப்பதானது சர்வதேச மனிதாபிமான சட்டதிட்டங்களுக்குப் புறம்பானதொரு செயற்பாடாகும்.
குற்றம் எதுவும் செய்யாத ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதானது மனிதாபிமானமற்ற செயலாகும். அடிப்படை மனித உரிமை மீறலாகும். பயங்கரவாத, அவசரகால தடைச் சட்டங்களின் கீழ் கைதான அரசியல் கைதிகள் மீது எந்தகைய குற்றங்களை சுமத்துவது என அரசாங்கம் யோசித்து வருகின்றது.
விடுதலைப் புலிகளின் கொள்கை வகுப்பாளர்களாக இருந்தோர் இன்று அரசாங்கத்தால் மன்னிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் இன்று வடமாகாண சபை தேர்தலுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், விடுதலைப்புலிகளென சந்தேகத்தின் பேரில் கைதான தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னமும் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பது வேடிக்கையாகவுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் அரசாங்கம் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரை சிறைகளுக்குள்ளேயும் இன்னுமொரு பகுதியினரை வெளியேயும் விடுவித்து தனது கண்காணிப்பில் வைத்துக் கொண்டு அவர்களின் சுயத்தை அழிப்பதில் குறியாகவே இருந்து வருகின்றது.
ஜனநாயகத்தின் சவக்குழியில் தமிழ் அரசியல் கைதிகளை காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தள்ளியே வந்துள்ளனர்.
இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் உருவாக்க விரும்பும் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் முக்கிய கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும்.
நீண்ட காலமாக சிறை வாழ்க்கை வாழும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் உடன் விடுதலை செய்யுங்கள்.
அவர்களின் குடும்பத்தினருடன் இணையுங்கள். அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துங்கள் என அவர் அரசை உருக்கமாக கேட்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர்
Geen opmerkingen:
Een reactie posten