தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற புலிகளுக்கு பிரிட்டன் வேறு பெயர்களில் கடவுச் சீட்டு வழங்கியுள்ளது!

யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 09:53.05 AM GMT ]
தரித்து நின்ற வாகனத்தை அடித்து சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவரும் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நிசாந்தன் சற்றுமுன் யாழ். நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ம் திகதி இரவில் வீதியில் நின்ற வாகனத்தை அடித்து அதன் கண்ணாடிகளை உடைத்ததுடன், வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிசாந்தன் இன்று செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டது எனவும் பெய்யான முறைப்பாட்டை பொலிஸார் பதிவு செய்துள்ளதாக மன்றில் நிசாந்தன் சார்பில் சட்டத்தரணிகளான என். சிறிகாந்தா, எம். றெமிடியஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர.
நிசாந்தனுக்குப் பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவித்து யாழ்.நீதிமன்றில் யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பெறுப்பதிகாரி சமன்சிகேரா தனது வாதத்தை முன்நிறுத்தினார.
இதனை அடுத்து யாழ்.நீதிமன்ற நீதிபதி, நிசாந்தனை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன், மாதத்தில் ஒரு ஞாயிறு யாழ்.பொலிஸ் நிலையத்தில் கையேழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்துள்ளார்.
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற புலிகளுக்கு பிரிட்டன் வேறு பெயர்களில் கடவுச் சீட்டு வழங்கியுள்ளது!
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 09:15.41 AM GMT ]
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற புலி உறுப்பினர்களுக்கு பிரிட்டன் வேறு பெயர்களில் கடவுச் சீட்டு வழங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றஞ்சுமத்தியுள்ளது.
இதன் காரணமாகவே குறித்த புலி உறுப்பினர்களை சர்வதேச பொலிஸாரினால் கைது செய்ய முடியவில்லை.
இலங்கையில் தேடப்பட்டு வரும் நபரான லோகேஸ்வரன் மணிமாறன் என்பவருக்கு சுந்தரமூர்த்தி மணிமாறன் என்ற பெயரில் பிரிட்டன் அரசாங்கம் கடவுச் சீட்டு விநியோகம் செய்துள்ளது.
இலங்கையில் தேடப்பட்டு வரும் ஐந்து புலி உறுப்பினர்கள் பிரிட்டனில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
எனினும்,இவர்களை கைது செய்து சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க பிரிட்டனின் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குறித்த சிங்கள ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten