[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 07:21.25 AM GMT ]
இவ்வாறு காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ் வண்டியுமே ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்குள்ளானது.
அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 15 இலங்கையர்கள் நாடு கடத்தல்
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 07:11.12 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு விமானத்தின் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரையில் 1285 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1072 பேர் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten