தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 april 2013

விடுதலை புலிகள் கருணாநிதியை மிரட்டியிருக்கலாம்: விக்கி லீக்ஸ் !


விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என்பதை நம்பலாம். தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடலாம் என்ற கோணத்தில் அந்த அச்சுறுத்தல் இருந்திருக்கலாம்” (…perhaps more credible theory is that the LTTE has threatened Karunanidhi with a significant increase in the level of militant violence in Tamil Nadu…) என சென்னை அமெரிக்க தூதரக கேபிள் ஒன்றில் எழுதப்பட்டிருந்தது, தற்போது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ‘90MADRAS1249-a, CONFIDENTIAL’ என தலைப்பிடப்பட்ட ரகசிய குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1989-ம் ஆண்டில் இவ்வாறு விடுதலைப் புலிகள் அச்சுறுத்தியிருக்கலாம் என வாஷிங்டனுக்கு அறிவித்துள்ளார்கள்.

அந்த கேபிளில், “அதுவரை கருணாநிதியின் அபிமானத்துக்கு உரியவர்களாக விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. திடீரென கருணாநிதி விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், மற்றும் சிலரை சந்தித்தார். அதன்பின் விடுதலைப் புலிகள் ஆதரவாளராக மாறிப் போனார். அதையடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தாராளமாக நடமாட அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனுமதித்தார். 

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு, சூழ்நிலை மாறியதுவரை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட கருணாநிதி தலைமையிலான அரசு அனுமதித்தது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten