தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 april 2013

கருணா பிள்ளையானை படுகொலை செய்ய கோத்தபாய முஸ்தீபு !


கருணா பிள்ளையானை படுகொலை செய்ய கோத்தபாய முஸ்தீபு

சிறீலங்கா சுதந்தரக்கட்சியை பலப்படுத்தல் என்ற பெயரில் பிள்ளையானையும் கருணாவையும் பின்தள்ளிவிட்டு பின்னர் அவர்களை படுகொலை செய்யும் முயற்சியில் மகிந்தர் ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாண செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில, மகிந்தரின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக பிள்ளையானோ கருணாவோ ஈடுபட்டால், இந்தவிதமான தயக்கமுமின்றி, விவேகமான முறையில் போட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை இரகசிய நடவடிக்கைகளுக்கான விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு கோத்தபாய வழங்கியுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது.
கருணா இனி தேவைப்படமாட்டார், அதேவேளை, போர்க்குற்றங்களின் சாட்சியாக மாற வேண்டிவந்தால் தமக்கு தலையிடியாக இருக்குமென்பதால், அவரை படுகொலை செய்யும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டாயிற்று, ஆனால் திகதிதான் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் தகவல்கள், இந்தியாவுக்கும் பிள்ளையானுக்கும் இருக்கும் தொடர்பால், பிள்ளையானை படுகொலை செய்வது தொடர்பாக இன்னமும் தீர்மானம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.
படுகொலை செய்த பின்னர் பழியை விடுதலைப் புலிகள் மீதோ, அல்லது முஸ்லீம் குழுக்கள் மீதோ போடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten