தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

கொழும்பை தாக்கும் புலிகளின் ஏவுகணை தேசியத் தலைவர் இருக்கும் இடத்தில் உள்ளது!


கொழும்பை தாக்கும் புலிகளின் ஏவுகணை தேசியத் தலைவர் இருக்கும் இடத்தில் உள்ளது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கொழும்பு வரை சென்று தாக்கக்கூடிய அதி நவீன ஏவுகணைகளை தயாரித்து வைத்திருந்தார்கள் என்ற திடுக்கிடும் உண்மை இங்கிலாந்தில் இருந்து நடத்தப்படும் இணையத்தள அதிபருக்கு கிடைத்துள்ளது. இலங்கை ராணுவ உயரதிகாரி ஒருவரே இணையத்தள அதிபரை தொடர்பு கொண்டு இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் என்று இணையத்தளம் தெரிவித்துள்ளது.

புலிகள் தயாரித்த ஏவுகணை கொழும்புவரை சென்று தாக்கக்கூடியது என்பதைவிட, கொழும்புக்கு அப்பாலும் செல்லக்கூடியதாக இருக்கலாம் என்ற பயத்தில் அமெரிக்கா மிரண்டு போனதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால், வன்னியில் இருந்து கொழும்புவரை செல்லக்கூடிய ஏவுகணை சாதாரண short-range ஏவுகணை என்ற பிரிவின் கீழ் வருகிறது. (1000 கி.மீ. அல்லது அதற்கு குறைவான தொலைவுக்கு செல்லும் ஏவுகணைகள்)

புலிகள் தயாரித்து வைத்திருந்த ஏவுகணை ஆபிரிக்கா வரை செல்லக்கூடியது என்று ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக இணையத்தள அதிபர் தெரிவித்துள்ளார்.

இறுதிச் சமரின்போது இந்த ஏவுகணைகளை பயன்படுத்த தளபதிகள் அனுமதி கேட்டபோதும், தேசியத்தலைவர் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லையாம். கொழும்பில் உள்ள தமிழர்களுக்கும் அழிவு நேரிடும் என்ற காரணத்தால் ஏவுகணைகளை பயன்படுத்த தடை விதித்த தேசியத் தலைவர் அவர்கள், தாம் சென்ற இடத்துக்கே அவற்றையும் கொண்டு சென்றுவிட்டதாக சிங்கள வல்லாதிக்க ராணுவ அதிகாரி, தேசிய இணையத்தள அதிபருக்கு ரகசிய செய்தி அனுப்பி வைத்துள்ளார்.

அது தொடர்பில் அகிலமே நடுங்கக்கூடிய ரகசிய தகவல்களை இங்கிலாந்து ஊடகம் வெளியிட உள்ளது என்று தெரிவித்துள்ள தேசிய இணையத்தள அதிபர், “இந்த தகவல்கள் வெளியிடப்பட்டால், விக்கிலீக்ஸ் அதிபருக்கு அமெரிக்காவால் கொடுக்கப்படும் தொல்லைகளை விட அதிகமாக எனக்கு கொடுப்பார்கள். ஆனால், நான் உயிருக்கு அஞ்சுபவன் அல்ல. தமிழினத்துக்காக மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கவும் தயார்” என்று கூறியுள்ளார்.
 — 

Geen opmerkingen:

Een reactie posten