தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

தோழி இசைப்பிரியாவிற்கு நடந்த கதியே எனக்கும் நேரும்": இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென ரதிமோகன் லோகினி கெஞ்சல்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியின் முன்னணி செய்தி வாசிப்பாளர் ரதிமோகன் லோகினி, தாம் இலங்கையிற்கு அனுப்பப்பட்டால் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படலாம் எனவும் அதனால் தன்னை இலங்கையிற்கு அனுப்ப வேண்டாம் என சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரதிமோகன் உள்ளடங்களாக 19 இலங்கையர்கள் துபாயிலிருந்து வெகு விரைவாக இலங்கையிற்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
இவ்வனைவரும் விடுதலைப் புலிகளுடன் மிக நெருங்கிய உறவினை பேணினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நாடு கடத்தப்படவுள்ளனர்.
இண்டிபென்டன்ட் நாளிதழுடனான தொலை பேசி உரையாடலின் பொழுது,
“நான் கொழும்பு திரும்புவதற்கு அஞ்சுகின்றேன். நான் அங்கு சென்றால் என்னை துன்புறுத்தி கொன்றுவிடுவார்கள். என்னுடைய தோழி இசைப்பிரியாவிற்கு நடந்த கதியே எனக்கும் நேரும்.
இசைப்பிரியா இறுதிப்போரின் பொழுது பாலியல் துன்புறுத்தலிற்குட்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
Reporters Without Borders மற்றும் ஜனநாயக ஊடக அமைப்பு ஆகியன வெளியிட்ட கூட்டறிக்கையில், லோஹினி அரச படைகள் மற்றும் ஆயதக் குழுக்களிளால் உள்நாட்டில் அச்சுறுத்தலிற்கு உட்படுத்தப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடைச்செய்யப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten