பின்னர் இறுதியாக எயிட்ஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஒரு அபிவிருத்தித் திட்டம் செய்யவிருப்பதாகக் கூறி 58,000 பவுண்டுகளைக் கோரியுள்ளார். இங்கே தான் சிக்கல் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட அந்த புரொஜெக்ட்(அபிவிருத்தி திட்டத்தில்) சந்தேகம் கொண்ட மேலதிகாரிகள் இதனை நன்கு ஆராய்ந்து பார்த்துள்ளார்கள். இதனையடுத்து அது போலியான திட்டம் என கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முழுமையான விசாரணை நடைபெற்றது. இதில் காமன்வெலத் நாடுகளின் நிதியில் இருந்து இவர் சுமார் 375,000 பவுண்டுகளைக் களவாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீதிபதி இவருக்கு 15 மாத சிறைத்தை தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார்.
இவருடன் இணைந்து பணப் பரிமாற்றத்துக்கு உதவிய 3 நண்பர்களுக்கும் தலா 8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சூதாட்டப் பழக்கம் காரணமாகவே பிரதீப் இவ்வாறு செய்துவிட்டார் என அவர் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten