தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 april 2013

சுப்பிரமணிய சுவாமியின் வீடு முற்றுகையிடப்பட்டு நடைபெற்ற போராட்டம்!


இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நாடு திரும்பினர்
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 12:28.45 AM GMT ]
இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.
நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
ஒன்பது பேரைக் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் கடந்த திங்கட்கிழமை இரவு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
இந்தப் பிரதிநிதிகள் குழு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.


சுப்பிரமணிய சுவாமியின் வீடு முற்றுகையிடப்பட்டு நடைபெற்ற போராட்டம்!
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 12:49.07 AM GMT ]
சுப்பிரமணிய சுவாமியின் வீட்டை நேற்று வெள்ளிக்கிழமை மாலை மே-17 இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இலங்கை  அரசின் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மாணவர்களை கொச்சைப்படுத்துவதோடு தமிழ் பொறுக்கிகள் என்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்த நிலையிலேயே இன்று மே-17 இயக்கத்தினரால் சுப்பிரமணிய சுவாமியின் வீடு முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மே 17 இயக்கத் தொண்டர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten