இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும், உறவுகளை, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்களினால் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது.
இந்தியாவில் வழிப்பாட்டு தலங்களுக்கு சென்றுவரும் இலங்கையர்கள் உட்பட மத தலைவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன்.
சிங்கள பௌத்தன் என்ற முறையிலும் துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்தவன் என்ற முறையிலும் கடும் தீர்மானங்களை எடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையிலிருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்திரீகர்கள் மற்றும் பெளத்த தேரர்கள் மீது தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, சென்னை நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten