தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதான பேச்சளருமான சுரேஸ் பிரேமச்சந்தின், விசாரணைக்காக 4ம் மாடிக்கு வருமாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.
இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு 4ம் மாடிக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.
கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியூடாக குற்றவியல் விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு அதிகாரி எஸ்.கே.செனரெத்தின என்பவரினால் கையெடுத்திடப்பட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிஜடி விசாரணை அதுதான் எனக்கு முதல் தடவை எனவுத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைப்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லாத ஒரு ஜனநாயக சூழலில் வாழ்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தை பாதுகாக்கத் தவறிய மகிந்த பதவி விலக வேண்டும்!- கூட்டமைப்பு
வடமாகாணத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்கத் தவறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பிரதம பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் தொடரும் ஊடகங்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் குரல் வலையை நசுக்கி தமிழ் மக்களின் அபிலாசைகளை புதைகுழி தோண்டிப் புதைத்து மகிந்த தனது அரச பயங்கரவாதத்தை கட்டழித்து விட்டுள்ளார்.
இன்று அதிகாலை உதயன் பத்திரிகையின் அலுவலகம் குண்டு வீசப்பட்டு தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தமிழ் மக்களின் மிச்சமிருந்த ஜனநாயக உரிமையையும் பறிப்பதாக இருக்கின்றது.
உதயன் பத்திரிகை மீண்டும் ஒரு தாக்குதலை சந்தித்துள்ளது. தன்னியங்கி துப்பாக்கி மூலம் வேண்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த செயல் அரச இயந்திரத்தை தவிர வேறு யாரினாலும் மேற்கொள்ள முடியாத செயல்.
மகிந்த வடக்கில் ஜனநாயகத்தை காப்பாற்றத் தறவியுள்ளார். இதனால் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
யாழில் ஊடகங்கள் மீது நடைபெறும் அரச பயங்கர வாதத்தினை சர்வதேசம் வெறும் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசை அழைக்க வேண்டும்.
வடமாகாணத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் இந்தக் காலத்தில் தனது இராணுவத்தினரை களத்தில் இறக்கி ஊடகங்கள் மீதான தாக்குதலை மேற்கொள்ள
வைத்திருக்கிறது இந்த அரசு. இதனை சரவதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
வைத்திருக்கிறது இந்த அரசு. இதனை சரவதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten