தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

106 மி.மீட்டர் பீரங்கியால் மக்களை தாக்கிய இராணுவம் !


2009ம் ஆண்டு இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்லும்வேளை, தாம் கனரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை எனவும் இலகுரக ஆயுதங்களைப் பாவித்தே முன்னேறியதாகவும் தெரிவித்தார்கள். இதனை ஒருதடவை சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் TV க்கு கோட்டபாய ராஜபக்ஷ நேரடியாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பூனகரியில் இருந்து முன்னேறிய இராணுவப் படைப் பிரிவின் 53 வது அணியினர் , மக்கள் வாழும் பிரதேசங்களூடாக ஊடுருவ பாரிய கனரக ஆயுதங்களைப் பாவித்துள்ளார்கள். தமக்கு எதிரில் இருக்கும் நிலைகளை, வீடுகளை மற்றும் தடையாக இருக்கும் எப்பொருட்களையும் அவர்கள் தகர்க்க 1006 MM பீரங்கிகளை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பூனகரியில் இலங்கை இராணுவம் இவ்வகையான கனரக ஆயுதங்களைப் பாவித்தார்கள் என்று இலங்கை இராணுவ அதிகாரி இருவர் தனது பிளாக்ஸ் பாட் இணையத்தில் படத்துடன் குறிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


Geen opmerkingen:

Een reactie posten