தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 januari 2015

கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி

சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 09:56.07 AM GMT ]
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான வாக்குரிமை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது சம்பந்தமாக தான் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற பதவியை இழந்த இவருக்கு மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியுமா என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எழுத்து மூலமாக கோரிய விடயம் சம்பந்தமாக சட்ட அனுமதி உள்ளதா என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாக தேர்தல்  ஆணையர் மேலும் குறிப்பிட்டார்

சோமாலிய கடற்கொள்ளையர்களை தாக்க பெருந்தொகை ஆயுதங்கள் எதற்கு: அமைச்சர் ஹெரிசன் கேள்வி!
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 10:29.56 AM GMT ]
சோமாலிய கடற்கொள்ளையர்களை தாக்க பெருந் தொகை துப்பாக்கிகள் எதற்கு என அமைச்சர் பீ. ஹெரிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலி துறைமுகத்தில் கப்பலில் இருந்து துப்பாக்கிகள் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்த வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சோமாலிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க இந்த ஆயுதங்களை கொண்டு வந்ததாக கொள்கலன்களை கொண்டு வந்துள்ள நிறுவனம் கூறுகிறது.
இலங்கையில் கடற்படை இருக்கும் போது சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க இந்தளவு ஆயுதங்கள் எதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

தலைமை நீதியரசர் பதவியை துறக்கவேண்டுமா?: நிபந்தனை விதிக்கும் நீதியரசர்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 10:32.37 AM GMT ]
தற்போதைய பிரதம நீதியரசரை பதவியில் இருந்து அகற்ற அரசு பல்வேறு வழிகளை தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர் இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்வதானால் தனக்கு அரசு ராஜ தந்திரியாக்கப்பட்டு வெளிநாட்டில் குறிப்பாக பிரித்தானியாவில் அல்லது பிரேசிலில் நியமனத்தை வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.
எனினும் அரசு இவருக்கு இந்த நாடுகளில் பதவியை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள போதும் ரோம் நகருக்கு இவரை இராஜதந்திரியாக்க அரசு முடிவு செய்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜயசூரியா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு இவரை ரோம் நகருக்கும் இலங்கை ராஜதந்திரியாக நியமிக்க முடிவு செய்துள்ள நிலையில் தற்போதைய நீதியரசர் இன்னும் தனது இராஜினாமாவை கையளிக்கவில்லை என்றும் கூறினார்.
இவரை இராஜினாமா செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை இவரின் நியமனம் அரசியல் நோக்கமுடையது என்றும் இவர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுற்ற நிலையில் முன்னைய ஜனாதிபதி மகிந்தவுடன் அலரிமாளிகையில் புரட்சி ஒன்று சம்பந்தமான பேச்சுவார்ததையில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டும் இருப்பதாக ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcju1.html
கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 10:51.53 AM GMT ]
கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை பெறுவதற்கான தகுதியும், மக்கள் ஆணையும் தம்மிடம் இருப்பதானாலேலே புதிய ஆட்சி மாற்றத்திற்கான கிழக்கு மாகாண சபையை சிர்வாகிப்பதற்கான  முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டமைப்பு பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் எமது நியாயபூர்வமான விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.கிழக்கு மாகாணசபை அமைவது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்,
மேலும் அவர் இது தொடர்பாக கருத்துக்கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டுத்தேர்தலில் கிழக்குமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சிசெய்யும் பொருட்டு முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க நாம் தயாராக இருந்தும் அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காமல் அப்போதைய ஐனாதிபதி மகிந்தவின் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தார்கள்.
எமது கோரிக்கை எதையும் அவர்கள் அப்போது ஏற்கவில்லை. அதற்காக நாம் கவலை அடைந்தோம். தற்போது புதிய ஐனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேன பதவியேற்ற பின்பு கிழக்கு மாகாணசபையின் ஆட்சியிலும் மாற்றம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியினை கோருவதில் என்ன பிழை இருக்கிறது. அதை மனிதநேயத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக்கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் முன்வரவில்லை.
மத்திய அரசாங்கத்தில் புதிய ஐனாதிபதி எமக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கவிருந்த போதும் நாம் அதை ஏற்கவில்லை காலம்காலமாக கிழக்குமாகாணத்தில் ஒன்றிணைந்து வாழும் இரு சமூகங்களும் தொடர்ந்தும் அவ்வாறே இருக்க வேண்டுமானால் இருசமூகமும் இணைந்து கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்வதே பொருத்தமான நடவடிக்கையாகும்.
இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தடையாகவும் தமிழ்மக்களின் நியாயத் தன்மையை புரிந்துகொள்ளாமலும் இருப்பது தமிழ்மக்களுக்கு வேதனையளிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து பெரும்பான்மை இன உறுப்பினர்களுடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு சிலர் எம்மிடம் வேண்டுகோள் விடுத்த போதும் நாம் அதை ஏற்கவில்லை.
காலகாலமாக கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டு வாழும்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்து ஆனந்தம் காணும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறவே இல்லை.
அந்த வரலாற்று தவறை நாம் செய்யமாட்டோம். அமைச்சுப்பதவிகளுக்காக யாரிடமும் மண்டியிடும் கட்சி எமது கட்சி இல்லை. நியாயத்தின் அடிப்படையில் தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கோருகிறோமே தவிர அநீதியாகவோ அன்றேல் அடிபணிந்தோ கேட்கவில்லை.
இலங்கை அரசியல் வரலாற்றில் 60 வருடங்களாக எதிர்கட்சியில் இருந்து அரசியல் செய்து  பழக்கப்பட்ட நாம் முதலமைச்சர் பதவிக்காக யாரிடமும் மண்டியிடமாட்டோம். மாறாக யார் ஆட்சி அமைத்தாலும் ஆளும்தரப்புடன் ஓடிப்போய் அமைச்சுப்பதவிக்காகவும் சலுகைகளைக்காகவும் சோரம் போகும் வரலாறு எமக்கில்லை இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிர்காலம் பதில் சொல்லும். இப்படி கூறினார் அரியம் எம்.பி
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcju3.html

Geen opmerkingen:

Een reactie posten