[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 08:36.48 AM GMT ]
தனது வாகனத்தில் மைத்திரியை வெற்றி பெறச் செய்வோம் எனும் கருத்தைத் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு தயார்படுத்தப்பட்ட வண்டிகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காட்சிப்படுத்துவதற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblq7.html
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 08:47.14 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச உதவி வழங்கும் முகமாக, லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயம் 4 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண் நிதியை மட்டு. இந்து இளைஞன் பேரவைக்கு வழங்கியது.
இதில் 2000 ஸ்ரேலிங் பவுண் நிதி வெள்ள ஆரம்ப காலத்துப் பாதிப்பின் போது மக்களுக்க மிக அவசர உதவியாக வழங்கப்பட்டது.
மேலதிக 2000 ஸ்ரேலிங் பவுண் நிதியில் தற்போதுள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன.
மட்டக்களப்ப மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 154 குடும்பங்களுக்கும் குருக்கள் மடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, தேயிலை, சோயாமீற் உட்பட்ட பொருட்கள் அதில் அடங்குகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், பொருளாளர் ந.புவனசுந்தரம், செயலாளர் சா.மதிசுதன், மேலும் பேரவையின் பிரதிநிதிகள் இப்பொருட்களை வழங்கி வைத்தனர்.
இவ்வுதவியைப் புரிந்த கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு பேரவையும் பாதிக்கப்பட்ட மக்களும் நன்றி தெரிவிக்கின்றனர்.
லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உதவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைக்கு வழங்கியது.
இந்த நிதியின் ஆரம்ப கட்டமாக திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட 55 குடும்பஙகளுக்கு போர்வை வழங்கப்பட்டது.
லண்டன் லூசியம் சிவன் கோயில் உதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு லண்டன் லூசியம் சிவன் கோயில் உதவிகளை செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு லூசியம் சிவன் கோயில் 3750 ஸ்ரேலிங் பவுண் நிதி உதவியை வழங்கியுள்ளது.
இந்நிதி உதவி மூலம், முதற்கட்டம் சித்தாண்டி 1ம் பிரிவில் வசிக்கும் இடைத்தங்கல் முகாமில் வாழ்ந்த 310 குடும்பங்களுக்க உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, தேயிலை, சோயாமீற் உட்பட்ட பொருட்கள் அதில் அடங்குகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், பொருளாளர் ந.புவனசுந்தரம், செயலாளர் சா.மதிசுதன், மேலும் பேரவையின் பிரதிநிதிகள் இப்பொருட்களை வழங்கி வைத்தனர்.
கடந்த சில வருடங்களாக கிழக்கு மாகாண மக்களின் துயர் துடைப்பு நடவடிக்கையில் லண்டன் லூசியம் சிவன் ஆலயம் உதவி வருகின்றது.
2013ம் ஆண்டு மட்டக்களப்பில் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்க துவிச்சக்கர வண்டிகள் வழங்கி கௌரவித்ததுடன், 2010, 2011, 2012ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரு வெள்ள அனர்ததங்களின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல லட்சம் ரூபாய் அனுப்பி அவசர உதவியை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblry.html
Geen opmerkingen:
Een reactie posten