கோட்டபாயவால் விரட்டி அடிக்கப்பட்ட குமார் குணரத்தினத்தை மீண்டும் கொழும்புக்கு கொண்டுவந்த மகிந்த !
[ Jan 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 7150 ]
அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் திடீரென கொழும்பு சென்றுள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்தவேளை அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என்று கூறி, கோட்டபாயவால் விரட்டப்பட்டார். பின்னர்ப் இவர் சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார். பல முறை இலங்கைக்கு செல்ல விசா அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் திடீர் என இலங்கை அரசாங்கம் இவருக்கு விசா வழங்கிவிட்டது என்ற செய்திகள் வெளியாகியது நினைவில் இருக்கலாம். தற்போது கொழும்பில் உள்ள குமார் குணரத்தினம், மகிந்தரை லேசாகச் சாடுவது போலச் சாடி மைத்திரியை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்.
அத்தோடு மட்டும் இவர் நின்றுவிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசியப் பிரச்சினையை காட்டிக் கொடுத்துவிட்டதாம் ! என்று வேறு கூறியுள்ளார். தமிழ் தேசிய பிரச்சனையை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்து விட்டதாக இவர் கருத்து வெளியிட்டுள்ளமை கண்டிக்க தக்க விடையம். அதாவது த.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு தெரிவிப்பதையே இவர் மறைமுகமாக இவ்வாறு கூறியுள்ளார். இதுவரை காலமும் கிடைக்காத இலங்கை விசா இப்போது எப்படி இவருக்கு கிடைத்தது ? மகிந்தருடன் மேசைக்கு அடியில் நடந்த டீல் என்ன ? என்று இவர் மக்களுக்கு முதலில் தெளிவுபடுத்துவது நல்லது. இதுவரை காலமும் மகிந்த அரசை விமர்சித்து வந்த இவர் தற்போது மட்டும் மகிந்த ஆதரரிக்க காரணம் என்ன ?
இவருக்கும் எத்தனை "C" வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1773.htmlயாழ் துரையப்பா விளையாட்டரங்கை சுற்றி 200 இ.போ.சா வண்டிகள்: மகிந்தர் வரவுள்ளார் !
[ Jan 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 4285 ]
இன்றைய தினம்(2) மகிந்த ராஜபக்ஷ, தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ் வரவுள்ளார். பொதுமக்களை ஏற்றி இறக்க சுமார் 200 இ.போ.சா வண்டிகளை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக ஏற்றி துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டுசெல்வார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. இதேவேளை இப்பகுதியை சுற்றி கடும் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மக்கள் அந்தப் பகுதியில் நடமாட முடியாது என்று இராணுவத்தினர் கூறிவருகிறார்கள் என்று யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் எதிரணியின் பொது வேட்ப்பாளர் மைத்திரிபால மற்றும் சந்திரிக்கா ஆகியோர் யாழ் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அப்போது பெருந்திரழான மக்கள் அதில் கலந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் தாமாகவே சென்று இக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். எவரும் பஸ் கொண்டுவந்து அவர்களை அழைத்துச் செல்லவில்லை. ஆனால் அக் கூட்டத்திற்கு சென்ற மக்களை விடவும் அதிகமான மக்களை, தனது கூட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று மகிந்த தனது கூலிப்படையான டக்ளசுக்கு உத்தரவிட்டுள்ளாராம். இதனால் டக்ளஸ் தீ யா வேலைசெய்கிறார் என்று யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தேரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/1775.htmlபிரபாகரனை "திரு.பிரபாகரன்" என்றும் தன்னை வெறும் மகிந்த என்றுமே சந்திரிக்கா அழைக்கிறார் !
[ Jan 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 5265 ]
புலிகளிடம் இருந்த ஆயுதங்களை நாம் ஒப்பிட்டால், அதுபோன்ற நவீன ரக ஆயுதங்கள் சிங்கள படைகளிடம் இருக்கவில்லை. நான் ஆட்சிக்கு வந்த பின்னரே நவீனரக ஆயுதங்களை வாங்கிக்கொடுத்தேன். அதன் மூலமே அவர்கள் போர் புரிந்து புலிகளை வீழ்த்தினார்கள். ஐக்கிய தேசிய ஆட்சிக் காலத்தில் ராணுவம் நிராயுதபாணிகள் எப்படி இருப்பார்களோ அதுபோலவே இருந்தார்கள் என்று பீலா காட்டியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ. ஒட்டுமொத்தத்தில் புலிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகளை பாவித்தவேளை இலங்கை ராணுவம் வேடுவர்கள் போல அம்பு வில்லை தான் பாவித்துக்கொண்டு இருந்தார் என்று மகிந்தர் பிரச்சாரக் கூட்டங்களில் கூறினாலும் ஆச்சரியப்பட முடியாது.
மகிந்த ராஜபக்ஷ இப்படியான பேச்சுக்களை தான் மேடைகளில் பேசி வருகிறார். ஆனால் மைத்திரியோ நன்கு திட்டமிடப்பட்ட, மற்றும் கல்விமான்களால் எழுதப்பட்ட மேடைப் பேச்சுகளை பேசி வருகிறார். எது வெல்லும் என்று பொறுத்திருந்து தான் பார்கவேண்டும். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளது. 8ம் திகதி நள்ளிரவு முதல் 9ம் திகதி காலை என தொடர்சியாக தேர்தல் நிலவரங்களை நாம் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை அப்-டேட் செய்ய ஏதுவாக வசதிகளை செய்துள்ளோம். எனவே அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1776.html
Geen opmerkingen:
Een reactie posten