[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 02:24.26 AM GMT ]
சுயாதீனமாதும், நீதியானதுமான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அனைத்து இலங்கையர்களினதும் ஒத்துழைப்பு அவசியம்.
தேர்தல் செயலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழக்க வேண்டும்.
இந்த தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்க ஓர் தேர்தலாகும்.
நாட்டின் ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டக் கூடிய வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உச்சளவில் தங்ளது கடமைகளை செய்ய வேண்டுமென மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களும் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblu4.html
தேர்தல் தினமன்று வடக்கில் கலவரங்கள் இடம்பெறக் கூடும்: எதிர்க்கட்சிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 03:34.06 AM GMT ]
வடக்கில் குழப்பங்களை விளைவித்து தேர்தலை குழப்ப முயற்சிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
வடக்கில் தேர்தல்கள் சுயாதீனமான முறையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவை தலைவர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
அண்மையில் தேர்தல் ஆணையாளருடன் இரண்டு மணித்தியாலம் வடக்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலை சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடாத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்குச் சாவடிகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblu7.html
பிரிவினைவாதத் தரப்புக்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளன: ஜனாதிபதி மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 03:37.02 AM GMT ]
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படைவீராகள் இரத்தம் சிந்தி ஐக்கியப்படுத்திய நாட்டை இன அல்லது மத அடிப்படையில் பிளவுபடுத்த நான் அனுமதிக்க மாட்டேன்.
பிரிவினைவாத கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் முஸ்லிம், தமிழ் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு விலகிக்கொண்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியொரு மாவட்டத்தை கோரியிருந்தது. தமிழ் அரசியல் கட்சிகளும் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றியது.
இவற்றுக்கு இனங்காத காரணத்தினால் அவை ஆளும் கட்சிக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்டன.
30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாடு அபிவிருத்தி செய்யப்படுவதனை சிலர் விரும்பவில்லை.
இந்த பிரிவினைவாத சக்திகள் என்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றன.
கட்சிக்குள் இருந்து கட்சியை சாப்பிடுவதனை விடவும் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு எதனைச் செய்தாலும் பரவாயில்லை.
மக்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எவராலும் சிதைக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblvy.html
Geen opmerkingen:
Een reactie posten