வெறும் 200 பேர் தான் வந்தார்கள்: மகிந்தர் அதிர்சியில் உறைந்தார் !
[ Jan 02, 2015 07:13:46 PM | வாசித்தோர் : 44600 ]
நேற்று கொழும்பில் உள்ள மகிந்தரின் அலரி மாளிகையில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுக்கு வெறும் 200 பேர் தான் வருகை தந்தார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் சுமார் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் வந்து அலரிமாளிகையை முற்றுகையிட்டு இருந்தார்கள். அதி முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் என பலர் மகிந்தரைச் சந்தித்து புத்தாண்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். ஆனால் இம்முறை அலரிமாளிகை வெறிச்சோடிக் காணப்பட்டது என்று அங்கு சென்று வந்த சிலர், தமது நண்பர்களுக்கு தெரிவித்து கிண்டலடித்துள்ளார்கள்.
ஜனவரி மாதம் மகிந்தவுக்கு மிகவும் கெட்ட மாதமாக அமைந்துவிட்டதாக அவர் கருதுவதாக கூறப்படுகிறது. பதவிக் காலம் முடிய இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில், மேலும் 6 வருடம் பதவியில் இருக்க ஆசைப்பட்ட மகிந்த ராஜபக்ஷ தற்போது பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். மகிந்தரை விட்டு பிரிந்த மைத்திரி, இனிமேல் மகிந்தரோடு அவர் வீட்டில் உள்ள எலியும் கரப்பான் பூச்சியும் தான் மிஞ்சி இருக்கும். ஏனையவர்கள் எல்லாரும் மகிந்தரை விட்டு விலகி விடுவார்கள் என்று நக்கலாக கூறியிருந்தார். உண்மையில் அது தான் தற்போது நடந்து வருகிறது.
மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள் மாத்திரமே அவரைச் சுற்றி உள்ளார்களே தவிர, ஏனையவர்கள் அவரை சுற்றி இருக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். இனி 9ம் திகதி தேர்தல் முடிவுகளை பார்க மிதி தெரியும் !
http://www.athirvu.com/newsdetail/1778.html
Geen opmerkingen:
Een reactie posten