மகிந்தவிற்கு “பைத்தியம்” அனுரகுமாரவின் அனல் பறக்கும் பேச்சு….
அனுர குமார திஸ்ஸநாயக்காவின் உரையைக் கேட்ட பின்பும் மகிந்த வேட்டியுடனும் சிவப்புச் சால்வையுடனும் வீதியில் இறங்கினால் அனுர குமாரவின் வசனத்தில் “பிஸ்சு” தமிழில் ” “… பல விடயங்களை சொல்கிறார் அதில் மிகவும் ரசிக்கக் கூடியது வீதியில் போகும் போது 3 காரோ அதற்கு மேற்பட்டதோ ஜனாதிபதிக்கு தேவை.
காங்கேசன் துறைக்கு `கெலியில் போறதற்கு யாராவது 3 கெலியைக் கொண்டு போவார்களா? பைத்தியமா? என்ன ஒரு கெலி வானில் பழுதடைந்தால் மற்றயதில் ஏறி இறங்கவா? 45 நிமிடம் போக வர 45 நிமிடம் அதற்கு போய் கோடிக்கணக்கில் யாராவது மாளிகை கட்டி மக்களின் பணத்தை விரயமாக்குவானா? ஐயோ மகிந்தரே அனுர கேட்கும் கேள்வியை நாமலே தாங்கமுடியாதுப்பா? என்னென்டுதான் தாங்கிறியோ? உண்மையில் தலைவா கல்நெஞ்சன் தான் …
http://www.jvpnews.com/srilanka/87937.html
மாமாங்கேஸ்வரர் கோவிலில் திருட முற்பட்டவர் கைது
கோவிலுக்கு முன்பாகவுள்ள குறிப்புப் புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கு வந்த பொலிஸாருக்கு, கோவிலின உட்புறத்திலிருந்து சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து, முன்கதவை உடைத்துப் பார்த்தபோது, ஒருவர் உண்டியலிருந்து பணம் திருடிக்கொண்டிருந்தமை தெரியவந்தது. இந்த நிலையிலேயே இவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
மேலும், இந்தச் சந்தேக நபர் கோவில் காவலாளியாக கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/87953.html
மகிந்தரின் பைல்களுக்கு பயந்து அரசியல் செய்ய முடியாது: அமைச்சர் ரெஜினோல்ட்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை(24) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எமுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ஃபைல்கள் தொடர்பில் கதைப்பதில் வேலையில்லை. உள்ளே உள்ளவர்களது ஃபைல்கள் உள்ளன. வெளியே உள்ளவர்களது ஃபைல்களும் உள்ளன. ஆனால் பைல்களுக்கு பயந்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. அப்படி இல்லாவிட்டால் ஃபைல்களை உருவாக்கி தமக்கு அருகில் வைத்துகொள்ள வேண்டும்.
கடந்த அரசாங்கத்திலும் பைல்கள் இருந்தது. இந்த அரசாங்கத்திலும் பைல்கள் உள்ளன. அடுத்தது, இந்த வேளையில் ஃபைல்களை வெளிப்படுத்தினால் இவ்வளவு காலமாக ஃபைல்களை வெளிபடுத்தாமல் மறைத்து வைத்திருந்த தவறிழைத்ததாக அரசாங்கம் மாறிவிடும் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/87956.html
SLFEயின் பொதுச் செயலாளர் நானே! மைத்திரிபால
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி பண்டாரநாயக்க கொள்கைகளை பின்பற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 17 வயதில் சிறிமா பண்டாரநாயக்க காலத்தில் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் கடந்த 47 ஆண்டுகளாக கட்சியில் அங்கம் வகித்து வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது வேறும் கட்சியிலோ இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும், கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்தலில் போட்யிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் போது இணைந்து கொள்வதாகத் தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருவதாகவும், நல்ல நல்ல விளையாட்டுக்களை எதிர்வரும் காலங்களில் பார்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடக்க வேண்டியவை சரியான நேரத்தில் சரியான முறையில் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/87961.html
Geen opmerkingen:
Een reactie posten