[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 07:58.34 AM GMT ]
குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபரான 16 வயது சிறுவன் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYepz.html
வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 08:03.20 AM GMT ]
இலங்கை முழுவதிலும் வாழ்ந்துவரும் 87,248 குடும்பங்களுக்கு மலசல வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருவதாக வட மாகாண சுகாதார செயலாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
வடககு மாகாணங்களைச் சேர்ந்த 24,917 குடும்பங்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 24,592 குடும்பங்களும் மலசல கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
போர் காரணமாக இடம்பெயர் வாழ்க்கை வாழ்ந்தமை மற்றும் கிராம மக்கள் மலசலகூட பயன்பாடு குறித்து ஆர்வம் காட்டமை ஆகியனவே இதற்கான பிரதான காரணங்களாகும்.
2016ம் ஆண்டளவில் வடக்கு கிழக்கைச்சேர்ந்த அனைவருக்கும் மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
நாட்டில் மலசலகூட வசதிகள் இன்றிய வாழும் மக்கள் குறைவாக வாழும் மாவட்டமாக கொழும்பு காணப்படுகின்றது.
கொழும்பில் 574 குடும்பங்கள் மலசல கூடமின்றி வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYep0.html
நாவாந்துறையில் மீண்டும் மோதல் : பொலிஸார் மீது தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 08:07.08 AM GMT ]
நேற்று முன்தினம் மாலை நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய சென்.மேரிஷ் அணி நாவாந்துறை சந்திப் பகுதியில் நின்று தமது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அப் பகுதியிலுள்ளவர்களுக்கும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்.மேரிஷ் அணியினருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் கற்கள், போத்தல்களை கொண்டு சண்டையிட்டதில் நாவாந்துறை பகுதியே பெரும் போர்க்களமாக மாறிய நிலையில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசார் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYep1.html
Geen opmerkingen:
Een reactie posten