தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே முடியும்!- டக்ளஸ்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விண்ணப்பிப்போருக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்பதிவுத் திணைக்களம்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 08:16.51 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் நிதியுதவியுடன் நடமாடும் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடமாடும் சேவை ஊடாக, எவ்வித கட்டணங்களும் இன்றி, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாறான நடமாடும் சேவை மூலம் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின், மாற்று வழிமுறைகள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து, அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 
தேசிய அடையாள அட்டை இல்லாமல் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYep2.html
மைத்திரிக்காக வாக்கு கேட்டு வருபவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்குமாறு பிரதி அமைச்சர் கோரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 09:48.37 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வாக்கு சேகரிக்கும் நபர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்குமாறு ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதி கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவே இதனை தெரிவித்துள்ளார்.
நாவுல நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
என்னை கொலை செய்வதற்கு ஒப்பந்தமொன்று வழங்கப்பட்டுள்ளது. கிரிவான சல்லிய கந்த அருகாமையில் என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நாம் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பயந்தவர்கள் அல்ல. கொலை செய்யப்பட்டால் கொலை செய்தவர்களை கொல்ல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள்.
நான் எதிர்க்கட்சிக்கு போக போகின்றேன்,மைத்திரிக்கு வாக்களியுங்கள் என கேட்டு கொண்டு வருவார்கள். அவ்வாறு வருபவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்குமாறு கிராம மக்களிடம் கோருகின்றேன்.
நந்திக்கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க திட்டமிட்டதனை விடவும் ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்டு வெற்றியீட்டுவோம் என லக்ஸ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYep4.html
மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பதை பற்றி ஆராய வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 10:03.13 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை ஆழமாக ஆராய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள், ஏனைய தரப்பினர் அவர்களின் கொள்கைகள், கருத்துக்கள் போன்றன குறித்து கவனம் செலுத்தப்படும்.
அனைத்து காரணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியே தீர்மானம் எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி அமைச்சு பதவிகளை துறந்த போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYep5.html
தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே முடியும்!- டக்ளஸ்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 08:45.09 AM GMT ]
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும். தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்புடன் அவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆக தெரிவாவார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான நேற்று நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய அவர், இங்கு மேலும் தெரிவித்ததாவது,
வடமாகாண சபைக்கு நிதி ஒதுக்குவதில்லை என்று குற்றஞ்சாட்டும் த.தே.கூ வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராய திறைசேறி செயலாளர் அழைத்த போது அதை நிராகரித்தது.
வடபகுதி மக்கள் பட்டினியில் வைத்திருப்பதையே த.தே.கூ விரும்புகிறது.
2020ம் ஆண்டு வரையான இலக்குகளை கருத்திற்கொண்டே இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 31 வீதம் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் த.தே.கூ அரசாங்கம் நிர்மாணித்த வீதிகளை தாமே நிர்மாணித்ததாக கூறுகிறது.
தமிழ் மக்களை அரசியல் ரீதியில் அநாதரவாக்கி விட்டு தாம் மட்டும் த.தே.கூ. முயல்கிறது. எமது மக்களின் நிலம் எமது மக்களுக்கே சொந்தமானது,
எஞ்சிய மக்களும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.
தேர்தல் காலத்தில் வெறும் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வழங்கும் த.தே.கூ ஒரு போதும் அவற்றை நிறைவேற்றுவது கிடையாது.
எமது அரசியல் உரிமையில் முதலாவது நடவடிக்கை 13வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவதாகும்.
அரசியல் தீர்வுக்கு 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்க த.தே.கூ ஒருபோதும் முன்வராது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம்
http://www.tamilwin.com/show-RUmszBRZKYep3.html

Geen opmerkingen:

Een reactie posten