தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

இந்தியாவின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி!

அமைச்சர் ஒருவருக்கு வந்த கொள்கலன்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 01:15.03 AM GMT ]
இலங்கையின் அமைச்சர் ஒருவரின் பெயரின் கீழ் இயங்கும் நிறுவனத்துக்கு வந்த இரண்டு கொள்கலன்கள் சோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கொள்கலனில் ஒன்று மோட்டார் உதிரிபாகங்கள் அடங்கியது என்று கூறப்பட்டது. எனினும் இரண்டு கொள்கலன்களும் பயன்படுத்திய சைக்கிள்கள் என்ற அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கலன்கள் இரண்டும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் பெயரில் இயங்கும் நிறுவனத்தின் பெயருக்கே அனுப்பப்பட்டிருந்தன என்று துறைமுக சுங்க தரப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு கொள்கலன்களும் கடந்த செவ்வாய்கிழமையன்று துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. எனினும் குறிப்பிட்டப்படி இரண்டும் பயன்படுத்திய சைக்கிள்கள் அடங்கிய கொள்கலன்கள் இல்லை என்று சுங்கத்தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்டப்படி 200 சைக்கிள்கள் என்றால் அவற்றுக்கு இரண்டு கொள்கலன்கள் அவசியமில்லை என்பதே சுங்கத்தரப்பின் வாதமாக உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXjx4.html
சந்திரிக்காவுடன் இணைந்து செயற்பட ஆளும் கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 01:24.23 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து செயற்பட, ஆளும் கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிடத் தீர்மானித்தமை, மீண்டும் ஜனாதிபதி தேர்தலை அறிவித்தமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய இடதுசாரி கட்சி உறுப்பினர்களே இவ்வாறு சந்திரிக்காவுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தனியான கூட்டணி ஒன்றை அமைத்து செயற்பட திட்டமிட்டுள்ளனா்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்தவிற்கு அதரவளிக்க எடுத்த தீர்மானம் காரணமாக சமசமாஜ கட்சிக்கள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
1977ம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக சமசமாஜ கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் லால் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சியின் 75 வீதமானவர்கள் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்தும் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி இன்று செல்லும் பயணம் குறித்து திருப்தி அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXjx5.html
இந்தியாவின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 01:40.20 AM GMT ]
இந்தியாவின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியிலும் சீனாவின் மற்றுமொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.
சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கை வந்து சென்றமை குறித்து இந்தியா இலங்கையிடம் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது.
இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் பதற்றத்தை கொண்டு வரும் என்றும் இந்தியா எச்சரித்திருந்தது.
எனினும் சீனாவின் இந்தக்கப்பல்கள் இராணுவ நோக்கில் இலங்கைக்கு வரவில்லை என்று இலங்கை பதிலளித்திருந்தது.
இந்தநிலையிலேயே மீண்டும் ஒரு நீர்மூழ்கி கப்பலை சீனா, இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய செய்திச்சேவை அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXjx6.html

Geen opmerkingen:

Een reactie posten