[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 01:10.38 AM GMT ]
இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தமது கணவரை மீட்டு தர மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, பெண்ணொருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளர்களில் ஒருவரின் மனைவி, சென்னை மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எமர்சன் என்பவரின் மனைவியே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் பின்னர் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் குறித்த ஐந்து பேருக்கும் இலங்கையின் மேல்நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்தது.
இது இந்திய அரசாங்க மட்டத்திலும் மீனவர்கள் மட்டத்திலும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBTWKXjx3.html
மண்சரிவில் புதையுண்டவர்களின் உண்மையான விபரங்கள் கண்டறிவதில் சிக்கல்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 02:01.17 AM GMT ]
இது தொடர்பான முழுமையாகத் திரட்டும் நடவடிக்கையை அம்பிட்டிக்கந்தை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி 36 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாமென உறுதியாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவர்களின் சடலங்களை மீட்கும் முயற்சிகள் கைகூடவில்லை.
நேற்றுவரை பத்துப் பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் சிலரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று 24 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதோடு, ஐவரே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காணாமற் போனோரை உறுதியாகக் கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னார்வக் குழுவொன்றை நியமித்து மீரியபெத்தையில் வாழ்ந்தவர்கள், காணாமற் போனவர்கள், வெளியிடங்களில் வாழ்பவர்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ள அம்பிட்டிக்கந்தை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXjx7.html
போர்க்குற்ற சாட்சிய சமர்ப்பிப்புக்கான காலம் நிறைவு! பிந்திய சாட்சியங்கள் நிராகரிக்கப்படமாட்டாது: ஐ.நா
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 01:03.29 AM GMT ]
எனினும் பிந்திக்கிடைக்கும் சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பிப்புக்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று விசாரணைக்குழு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவலை இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதுவரைக்கும் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் என்பவற்றை உரிய முறைக்கு கொண்டு வர இன்னும் இரண்டு மாதங்களாவது செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் சமர்ப்பிப்புக்கான காலம் முடிவடைந்துள்ள போதும் தொடர்ந்தும் வருகின்ற சமர்ப்பிப்புக்களை நிராகரிக்கப் போவதில்லை என்று விசாரணைக்குழுவின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில்லி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXjx2.html
Geen opmerkingen:
Een reactie posten