தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

மஹிந்தவின் உருவ பொம்மை எரிப்பு: திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!

முழு உலகத்தின் கவனமும் மகிந்த சிந்தனை மீது: ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 12:45.52 PM GMT ]
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் மாத்திரமல்லாது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூட மகிந்த சிந்தனையை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பாதுகாப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெளிநாடுகள், உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் என்பன ஆலோசனைகளை வழங்கினாலும் அந்த ஆலோசனைகளை அப்படியே செயற்படுத்தாது இலங்கைக்கே உரிய பொருளாதார முறையை உருவாக்கி கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw6.html

மஹிந்தவின் உருவ பொம்மை எரிப்பு: திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 01:22.16 PM GMT ]
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மஹிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் துக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதனை கண்டித்து பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இன்று காலை கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், செருப்பு மாலையுடன் கூடிய ராஜபக்சவின் உருவம் தாங்கிய பதாகைகள் மற்றும் ராஜபக்சவின் உருவ பொம்மையை சுமந்த பாடையுடன் மேளம் அடித்தபடி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது “ராஜபக்சே ஒழிக, அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே இப்போது இந்திய மீனவர்களை கொல்லதுடிக்கிறார்கள்” என கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், “போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், கடந்த 45 வருடமாக இலங்கையில் தூக்குதண்டனை வழங்கப்படவில்லை.
ஆனால் இப்போது இந்திய தமிழக மீனவர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததை போல் தமிழக மீனவர்களையும் கொல்லதுடிக்கிறது ராஜபக்சே அரசு. இந்த தண்டனையை எதிர்த்து மத்திய அரசு தலையிட்டு அப்பாவி தமிழர்களை மீட்கவேண்டும். செய்யத் தவறினால் போராட்டங்களை முன்னெடுப்போம் ”என்றார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பிலிருந்த காவல்துறை டி.எஸ்.பி கணேசன் தலைமையிலான போலீஸார் உருவ பொம்மையை பிடுங்கி எறிந்தனர்.
இதில் ஆவேசமடைந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள், ராஜபக்சவின் பதாகைகள் தீயிட்டு கொழுத்தினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 க்கும் மேற்பட்டவர்கள் போலீஸாரால் கைது செயப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw7.html

Geen opmerkingen:

Een reactie posten