[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 01:39.35 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆசியாவில் அதிகளவில் காலநிலை இடர்பாடுகளை சந்திக்கும் இலங்கையின் இடர் முகாமைத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கவனத்தில் கொள்ளும் போது அரசாங்கம் அப்படியான அனர்த்த நிலைமையை புறந்தள்ளி உள்ளதை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எடுத்துக்காட்டுகிறது.
சுகாதாரத்திற்காக வருடாந்தம் 13 ஆயிரத்து 909 கோடி ரூபா ஒதுக்கப்படுகிறது. இந்த பணத்தை இரண்டு கோடி மக்கள் தொகைக்கு வகுக்கும் போது ஒரு நபரின் சுகாதாரத்திற்காக வருடாந்தம் 5 ஆயிரத்து 850 கோடி ரூபாவே ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியானது ஜனாதிபதி 20 நிமிட செலவுக்கு ஈடானது. அத்துடன் வெள்ளம், நிலச்சரி இடர்களுக்காக 314 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தானங்களை வழங்க விமானங்களிலும் தரை மார்க்கமாகவும் செல்ல ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதனை விட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையை விட இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான செலவு 103 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.
ராஜபக்ஷவினரின் பொறுப்பில் இல்லாத பல அமைச்சுகளுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்பட்டுள்ளது.
முழு நாட்டுக்கும் உணவை வழங்கும் அமைச்சுக்கு முழு வருடத்திற்கும் 4 ஆயிரத்து 211 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXixy.html
எஞ்சியிருப்பவர்களாவது நிம்மதியாக வாழ வழிசெய்ய வேண்டும்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 02:09.13 PM GMT ]
இதர மக்களினதும் அரசாங்கத்தினதும் விரைவான நடவடிக்கைகளின் மூலமே பாதிக்கப்பட்ட மக்களை அதிலிருந்து ஓரளவு மீட்டெடுக்க முடியும்.
சொந்த பந்தங்களுடன் நிம்மதியாக வாழ்ந்த மக்கள் ஒரு கனப் பொழுதில் அனைத்தையும் இழந்து அநாதைகளாகி விடுகின்றனர். இதுவே இயற்கை அனர்த்தத்தின் கோர முகமாகும்.
கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் கடந்த 29ம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் ஏற்பட்ட மனித பேரவலம் காரணமாக மலையகம் எங்கும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
பாடசாலைக்கு சென்ற சிறுவர்களும், அதிகாலையில் தொழிலுக்காக வீட்டைவிட்டுச் சென்றவர்களுமே உயிர் தப்பியுள்ளனர்.
வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் என வீட்டிலிருந்த பலரும் மிகப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இயற்கையின் இந்தக் கோரதாண்டவம் காரணமாக சுமார் 300 பேர் காணாமல் போயிருக்கலாம் அல்லது மண்ணுள் புதையுண்டு போயிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
எனினும், கணக்கெடுப்புக்களின்படி 192 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, 58 குடும்பங்களை சேர்ந்த 75 பிள்ளைகள் பாடசாலை சென்ற காரணத்தினால் உயிர் தப்பியுள்ளனர்.
இதனிடையே மீட்புப் பணிகளில் படையினரும் பொதுமக்களும் ஈடுபட்ட போதிலும், மண்ணில் புதையுண்டவர்களை உயிருடன் மீட்க முடியாது போயுள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ச்சியான மழை என்பன மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பாரிய இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன் லயன் குடியிருப்புகளுக்கு மேலாக 35 அடி உயரத்துக்கு மண் மூடியுள்ளதால் அவற்றை அகற்றி தேடுதலை மேற்கொள்வது கடினமான பணியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீரியபெத்த தோட்ட மண் சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள், ஒரு பால் சேகரிப்பு நிலையம், 90 வருடம் பழைமை வாய்ந்த கோயில், 2 வர்த்தக நிலையங்கள், ஒரு சனசமூக நிலையம் என்பன இருந்த இடம் தெரியாமலே மண்ணுக்குள் மறைந்து போயுள்ளதாகவும், மீரியபெத்த என்ற தோட்டம் இருந்தமைக்கான அடையாளமே இல்லாமல் போயுள்ளதாகவும் உயிர்தப்பிய மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இரண்டு மலைகளுக்கு நடுவில் மீரியபெத்த தோட்டம் அமைந்துள்ளதாகவும் அதில் ஒன்றான 300 அடி உயரமான மலையே இவ்வாறு சரிந்து பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் 10 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மழை தொடர்ந்து பெய்யுமிடத்து மலையகத்தின் இதர பிரதேசங்களிலும் இத்தகைய மண்சரிவு அபாயம் ஏற்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய சகல பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் இருப்பதால் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்பில் 2005ம் ஆண்டு எச்சரிக்கை விடப்பட்ட போதிலும் அது தொடர்பில் அரசாங்கமோ அன்றேல் தோட்ட நிர்வாகமோ எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மீண்டும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் 2011ம் ஆண்டு இப்பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து 75 லயன் அறைகளை மாற்றுவதற்கான காணிகள் தெரிவு செய்யப்பட்டு 30 வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அவை முழுமையாக நிர்மாணிக்கப்படாது கைவிடப்பட்டு விட்டன.
அத்துடன் அதிகாரிகளும் சரி, மண்சரிவு அபாயம் நிலவிய பிரதேங்களில் வசித்த மக்களும் சரி காலப்போக்கில் இந்த எச்சரிக்கைளை மறந்துவிட்டனர்.
புதிய வீடுகளும் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாகவே அடைமழை பெய்ய ஆரம்பித்ததும் எழுந்தமானமாக மண்சரிவு அபாயம் குறித்தும் வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கை விடப்படுவதுண்டு.
அதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள இடங்களை தொழில்நுட்ப ரீதியாகக் கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே அவர்களால் முன்வைக்கப்பட்ட காரணங்களாகும்.
பொதுவாகவே வளர்ச்சியடைந்த நாடுக ளில் இயற்கை அனர்த்தங்கள் குறித்து மக்க ளுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு பாது காப்பான இடங்களுக்கு மக்கள் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அது மாத்திரமன்றி, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்ற இடங்களில் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதும் கிடையாது.
அவ்வாறு வீடுகள் அமைந்திருந்தால் கூட அவை உடனடியாக அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் புதிய குடியிருப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டு விடும். எனினும், அந்த வகையான துரித நடவடிக்கைகள் எதுவும் இல்லாதிருப்பதே இயற்கை அனர்த்தங்களின் போது பெரும் எண்ணிக்கையான மக்கள் அநியாயமாகப் பலியாகக் காரணமாகி விடுகிறது.
அந்தவகையில் மீரியபெத்த அனர்த்தம் நிகழாமல் தடுத்திருக்கப் போதுமானளவு கால அவகாசம் இருந்தமையை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதியை இந்நாட்டு மக்கள் என்ன, உலகமே மறந்திருக்க மாட்டார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடிய மக்களுக்கு மறுநாள் பேரதிர்ச்சி காத்திருந்தது.
சுனாமி பேரலையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மடிந்தார்கள். அதே போன்றதோர் அனர்த்தத்தையே மீரியபெத்த தோட்ட மக்களும் எதிர்நோக்கினர்.
எவ்வாறெனினும், சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து இயற்கை அனர்த்தங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது? அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பைத் தேடிக் கொள்வது என்றெல்லாம் பேசப்பட்டது.
இறுதியில் அதுவும் காலப்போக்கில் மறந்து போன அத்தியாயமாகவே கைவிடப்பட்டது. இது தொடர்பில் தேசிய ரீதியில் சிந்தித்து இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கானதோர் பொறிமுறையை வகுத்திருந்தால் கூட இவற்றை ஓரளவு குறைத்திருக்க முடியும்.
ஒருவகையில் இயற்கை அனர்த்தங்கள், எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்ட சக்தி மிக்கவை என்ற காரணத்தினால் அதனை எதிர்கொள்வது கஷ்டமான காரியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இருந்த போதிலும் நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை முன்கூட்டியே அறியும் மார்க்கங்களைக் கண்டு பிடிப்பதும் அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். அதனையே வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் பலவும் கையாண்டு வருகின்றன.
உலகின் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக ஜப்பான், பிலிப் பைன்ஸ், இந்தோனேஷியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அடிக்கடி எரிமலை வெடிப்புக்கள் ஏற்படுவதுடன் பெருமளவு சாம்பரும் புகையும் கக்கப்பட்டு குறித்த சூழல் பெரும் பாதிப்புக்களுக்கு ஆளாகின்றது.
இருந்த போதிலும் மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனர். அவ்வாறான உபாயமொன்றைக் கையாள வேண்டிய அவசியம் குறித்து சிந்திப்பது இன்றியமையாதது.
இலங்கையில் சுனாமியை தொடர்ந்து ஏற்பட்ட மற்றுமொரு இயற்கை பேரவலம் இது என்பதால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அவலங்கள் நாட்டில் எந்தப் பகுதியிலும் ஏற்படாதிருக்ககூடிய வகையில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
இதேவேளை, மண் சரிவால் உற்றார் உறவினர்களை இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் தப்பியுள்ள மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பதே அடுத்து எழும் கேள்வியாகும்.
அவர்களை பொறுத்தமட்டில் அரசாங்கம், அரசு சாரா சமூக நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இவை உடனடி உதவிகளேயா கும். இதன் மூலம் குறித்த மக்களின் நிரந்தரப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டப் போவதில்லை.
அந்த வகையில் எஞ்சியுள்ளவர்களாவது நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்க சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை, மீரிய பெத்த தோட்ட மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடங்களை கட்டிக்கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
மேலும், தோட்ட மக்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக அமெரிக்காவும் இந்தியாவும் உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனை உரிய முறையில் பயன்படுத்தி மண் சரிவால் பாதிக்கப்பட்டு உயிருடன் எஞ்சியிருப்பவர்களாவது அச்சமின்றி நிம்மதியாக வாழ வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.
அதேபோன்று மலையகத்தில் மண்சரிவு அபாயமுள்ள இதர பிரதேசங்களையும் இனங்கண்டு அச்சூழலில் வாழும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும்.
இது தொடர்பில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஒருமுகமாக செயற்படுவது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXixz.html
Geen opmerkingen:
Een reactie posten