தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

ஆய்வுத் திட்ட யோசனைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை- இந்திய மன்றம் வேண்டுகோள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படமாட்டாது: உயர்கல்வி அமைச்சர்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 11:31.21 AM GMT ]
பல்கலைக்கழகங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட மாட்டாது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கப்படவில்லை என்பதால், எதிர்காலத்திலும் வழங்கப்படாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என மகிந்த சிந்தனையில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கங்கந்த சுட்டிக்காட்டியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw1.html
ஆய்வுத் திட்ட யோசனைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை- இந்திய மன்றம் வேண்டுகோள்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 11:14.42 AM GMT ]
கல்வி, கலாச்சாரம், தொல்பொருளியல் ஆய்வு உட்பட பல துறைகளில் திட்ட யோசனைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை - இந்திய மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொருளதாதரா, தொழில்நுட்பம், மற்றும் கலாச்சார ரீதியான ஒத்துழைப்பு மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்க்கும் நோக்குடன் 1998 இல் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை மூலமாக ஏற்படுத்தப்பட்டதே இந்திய - இலங்கை மன்றம்.
இந்திய - இலங்கை மன்றம் தற்போது கல்வி, கலாச்சாரம், தொல்பொருளியல், விவசாய ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், அபிவிருத்தி கற்கை மற்றும் பால்நிலை கற்கை போன்ற பிரிவுகளில் திட்ட யோசனைகளை கோரியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவகங்களில் ஆராய்ச்சி திட்டங்களுக்காகவும், கல்வி செயற்பாடுகளுக்காகவும் திட்ட யோசனைகளை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw0.html

Geen opmerkingen:

Een reactie posten