தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது!

அரசாங்கத்தை சீண்டிப் பார்க்க அமைச்சர் சம்பிக்க தீர்மானம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 03:14.59 PM GMT ]
அரசாங்கத்தை சீண்டிப் பார்க்கும் வகையில் அரசின் ஊழல்கள் மற்றும் கசினோ சூதாட்டம் குறித்த மோசடிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை வெளியிட அமைச்சர் சம்பிக்க ரணவக்க தீர்மானித்துள்ளார்.
இதற்கேற்ப எதிர்வரும் 05ம் திகதி கொழும்பு மகாவெலி நிலையத்தில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.
சம்பிக்க ரணவக்க மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்த விடயத்தில் ஊழல் நடைபெற்றிருந்ததாக அமைச்சர் பவித்ரா குற்றம் சாட்டியிருந்தார். இது அமைச்சர் சம்பிக்கவை கடுமையாக சீண்டியுள்ளது.
இதன் காரணமாக அரசாங்கத்தின் சில மோசடிகள் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்தி பதிலுக்கு அரசாங்கத்தை சீண்டிப் பார்க்க அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் நம்புகின்றார்.
அமைச்சர் சம்பிக்கவின் தீர்மானம் குறித்து அறிந்து கொண்டுள்ள அரசாங்கம், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றது. அதன் ஒருகட்டமாக மின்சார சபை ஊழல்கள் தொடர்பான புலனாய்வுத்துறை விசாரணைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXirz.html
ஜனாதிபதித் தேர்தல் திகதி இதுவரை முடிவாகவில்லை: அமைச்சர் சுசில்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 03:30.39 PM GMT ]
ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் திகதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சத்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திகதி குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த வருடம் முதற்பகுதியில் அது நடைபெற்றாலும் கூட நாங்கள் அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
தங்களுடைய வேட்பாளர் வென்றால் 6 மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்போம் என்று சில கட்சிகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாமல் அவர்களால் அதனை செய்ய முடியாது என அவர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir0.html

கிளிநொச்சி மக்கள், வர்த்தகர்களின் மலையக மக்களுக்கான நிவாரண உதவிகள் இன்று பதுளையில் கையளிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 03:10.28 PM GMT ]
கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள், கரைச்சி பிரதேசபையினரிடம் வழங்கப்பட்ட பெருமளவு உலர் உணவு பொருட்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகிகள் கரைச்சி பிரதேச சபை என்பவற்றால் நேரடியாக மலையகத்தில் உள்ள புனாகல பாடசலையில் உள்ள பாதிக்கப்பட்ட கையளிக்கப்பட்டுள்ளன. 
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக கிளிநொச்சி சந்தைவர்த்தகர்கள் நகரவர்த்தகர்கள் இரணைமடு சந்தை வர்த்தகர்கள் கருணையுள்ளம் படைத்தவர்களால் கிளிநொச்சி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் கரைச்சி பிரதேசபையினரிடம் வழங்கப்பட்ட பெருமளவு உலர்உணவு பொருட்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகிகள் கரைச்சி பிரதேசசபை என்பவற்றால் நேரடியாக மலையகத்தில் உள்ள புனாகல பாடசலையில் உள்ள பாதிக்கப்பட்ட கையளிக்கப்பட்டுள்ளன.
காலநிலை சீரின்மை மற்றும் பல இடர்பாடுகள் இருந்தபோதும் அவற்றினை கடந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிவாரண அணியினர் நிவாரணப் பொருட்களை மலையகத்தில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்துள்ளனர்.
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் இராணுவத்தின் அனுமதி பெற்று இந்தப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
பதுளை புனாகலவில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அறிவுரைக்கமைய நடந்த நிவாரணப் பொருள் கையளிப்பில் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் நாவை.குகராஜா பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் கரைச்சி பிரதேசபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் பண்டாரவளை நகரசபை உறுப்பினர் சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேசபையின் உறுப்பினர்களான பாலாசிங்கசேதுபதி மா.சுகந்தன் சுப்பையா தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்களான ஜெயக்குமார் கனகலிங்கம் லூக்கா கிருஸ்ணபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஜோசப் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் சர்வானந்தா உட்பட கரைச்சி பிரதேசபையின் பணியாளர்களும் இந்த பணியாற்றியிருந்தனர்.
2ம் இணைப்பு
பதுளை மாவட்டத்தில் கொஸ்லிந்தை பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தகர்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உலர் உணவு பொருட்களுடன் மேற்படி பாதிப்பிற்குள்ளான பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மேற்படி விஜயத்தின் போதான அனுபவங்கள் மற்றும் மக்களின் அனுபவ பகிர்வு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் எமக்கு கூறியது. அவர்களுக்கு சொந்த நிலம் இல்லை, வாழ்வாதார வசதிகளும் போதுமானதாக இல்லை. மேலும் வீட்டு வசதிகளும் இல்லை. என மக்கள் எமக்கு கூறியிருக்கின்றனர்.
மேலும் இடம்பெயர்ந்து மக்கள் தங்கியிருக்கும் முகாம்களிலிருந்து மக்களை வெளியே செல்ல படையினர் அனுமதி மறுப்பதாகவும், அதனால் கடந்த 5 தினங்களாக தாங்கள் குளிக்கவில்லை. என்றும் மக்கள் உருக்கமாக எமக்கு கூறியிருக்கின்றனர். மேலும் மண்சரிவில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் இதுவரை 6 அல்லது 7 மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்.
மேலும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 42 என அறிகின்றோம். இந்த நிலையில் மக்கள் எல்லா வழிகளாலும் குழப்பமடைந்து உளரீதியாக அழுத்தங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் வடக்கில் 5மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருட்கள் சேகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் நேரில் சென்று நாங்கள் அவதானித்ததன் படி அந்த மக்களுக்கு இனிமேல் பொருட்களை கொடுப்பதை காட்டிலும் அவர்களுக்கு நிரந்தரமாக வீடுகள் அல்லது நில வசதிகள் செய்து கொடுப்பதற்காக,
எங்கள் மக்கள் ஒவ்வொருவரும் பத்து ரூபா நிதியை தன்னும் கொடுத்து அந்த மக்கள் நிரந்தரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான அடிப்படைகளை உருவாக்கிக் கொடுப்பது சாலப் பொருத்தமான ஒன்றாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். நாம் இவ்வாறு கூறுவதற்கு மிக முக்கியமான காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் எமக்கு கூறிய ஒரு விடயம் மட்டுமே.
அதாவது இந்த மண்சரிவும், இத்தனை உயிர்களின் தியாகமும் இல்லை. என்றால் எங்களுடைய பிரச்சினைகள் இவ்வளவு தூரம் உலகத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்பதே. இது அங் குள்ள மலையக தமிழர்களுக்கு மட்டுமல்ல. தமிழ் இனத்திற்கே இதுதான் நிலை. அழிவுகளையும் தியாகங்களையும் செய்யாவிட்டால்,
எங்கள் நீதி வெளியே யாருக்கும் கேட்பதில்லை. நாங்கள் அழிந்தால் மட்டுமே அனைவருக்கும் கேட்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு எங்களால் முடிந்த பண உதவிகளை கொடுத்து அந்த மக்கள் நிரந்தரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான அடிப்படைகளை உண்டாக்கி கொடுப்பது மிக பொருத்தமானதாக இருக்கும் என்றார். 
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiry.html
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 02:39.35 PM GMT ]
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கட்டார் ராஜ்ஜியத்தில் தொழில் செய்து விட்டு நாடு திரும்பிய திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அவர் கட்டார் நாட்டுக்குத் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்யும் முயற்சியில் தேவியன், கோபி ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாகவும் பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தொடர்புகள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiq6.html

Geen opmerkingen:

Een reactie posten