தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

ஜனாதிபதி தேர்தலை வைத்து கூட்டமைப்பு பேரம் பேச வேண்டும்: பிரபா கணேசன்



பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்: கூட்டமைப்பு கோரிக்கை
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 12:36.08 PM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிகளில் இடம்பெறும் மீட்புப் பணிகளை இடைநிறுத்தாமல் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு, ஆறுதல் கூறுவதற்கு ஏனைய பகுதிகளில் இருந்துவரும் உறவுகளை அனுமதிக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்து, திரும்பிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், பிரசன்னா இந்திரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை, கலையரன், மா.நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம்,
நாம் அங்கு முதலில் சம்பவம் இடம்பெற்ற இடத்தினைச் சென்று பார்வையிட்டோம். அந்த இடத்தினைப் பார்ப்பதற்கு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
நாம் எமது சிறப்புரிமை மூலம் அங்கு சென்று பார்வையிட்டோம். அங்கு இயந்திரங்கள் மூலம் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படுகின்றன.
200க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அங்கு அப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நாம் நின்ற சந்தர்ப்பங்களில் எவ்வித புதையுண்ட உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் நின்ற இடத்திற்குச் சற்றுத் தொலைவில் பொதுமக்கள் நின்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் திரும்பி வரும் வேளையில் தங்களை அவ்விடத்திற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லையென பொதுமக்கள் எங்களிடம் முறையிட்டார்கள்.
இது சம்மந்தமாக நாம் மேலிடத்தில் கதைப்பதாக கூறிகொண்டு அங்கிருந்து வந்து சில முகாம்களுக்குச் சென்று பாதிப்புற்ற மக்களைப் பார்வையிட்டோம்.
நாங்கள் அங்கு சென்றதும், வடக்கு கிழக்கில் இருந்து எமது உறவுகள் எம்மை வந்து பார்த்து ஆறுதல் கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்ற செய்தியை அவர்கள் எமக்குத் தெரிவித்தார்கள்.
அங்குள்ள குறைபாடுகள் பற்றி அவர்கள் கூறினார்கள். தாங்கள் வெளியே செல்ல முடியாமல் இருக்கின்றது.
வெளியே இருக்கின்றவர்கள் உள்ளே வந்து பார்க்க முடியாமல் இருக்கின்றது. குளிப்பது பொன்ற உள்ளக வசதிகள் குறைவாக இருக்கின்றது என்று தெரிவித்தார்கள்.
இந்த உள்ளக வசதி இல்லாமை தொடர்பாக நாம் அங்கு அப்போது அமைக்கப்பட்டுள்ள நிர்வாகத்துடன் கலந்துரையாடி அவ்விடயங்களுக்கான நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து ஏனைய முகாம்களுக்குச் சென்றோம்.
செல்லும் வழியில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களையும் நாங்கள் சந்தித்து மக்கள கூறிய குறைபாடுகள் பற்றியும் எடுத்துச் சொன்னோம்.
பொதுவாக பொதுமக்கள் வந்து தங்கள் உறவினர்களை பார்வையிடுவதற்கு ஏதாவதொரு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம்.
அங்கு சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதும் எமக்குத் தெரியும். ஆனால் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மனிதாபிமான ரீதியில் செயற்பட வேண்டும் எனவும் அவருக்கு வலியுறுத்தினோம்.
எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, ஐந்து நிலையங்களிலே மக்கள் இருக்கின்றார்கள். பூணாகலை தமிழ மகா வித்தியாலயம், பூணாகலை சிங்கள மகா வித்தியாலயம், பூணகலை தமிழ் மகா வித்தியாலயம் இல 02, கொஸ்லாந்த கணேசா வித்தியாலம், ஹல்துமுல்ல தமிழ் மகா வித்தியாலம் ஆகிய ஐந்து இடங்களில் மக்கள் இருக்கின்றார்கள்.
இதில் பாதிப்புக்குள்ளான மீரியபெத்த தோட்டத்தில் இருந்து சென்ற மக்கள் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இருக்கின்றார்கள்.
பொதுவாக நிவாரணங்களைப் பொறுத்த மட்டில் அரச அதிபருடைய தகவலின் படி, போதுமான அளவிற்கு நிவாரணம் இருப்பதாகவும் அதனை விநியோகிப்பதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பல இருப்பதாகவும் அத்துடன் நாம் விடயம் தொடர்பாகவும் நடிவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் மக்களிடம் இருந்து அறிந்த தகவல்களின் படி, 40 தொடக்கம் 60 பேர் வரை காணவில்லை என்றும் திட்டவட்டமாக கூறமுடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தத்தின் காரணமாக 10 பிள்ளைகள் தாய், தகப்பன் இருவரையும் இழந்திருக்கின்றார்கள், 68 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை இழந்திருக்கின்றார்கள்.
இந்த பிரதேசம் கிட்டத்தட்ட 40 அடி வரை மண்ணால் மூடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
எனவே இவ்வளவு தூரம் இருக்கும் மண்ணை எவ்வாறு அகழ்ந்து எடுப்பது, அதில் புதையுண்டுள்ள உடலங்களை கண்டுபிடிப்பது தொடர்பாக நிபுணர்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டும்.
மலேசிய விமானத்தினை இன்னும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை இடம்பெறுகின்றது. அது போலவே இந்த தேடுதல் நடவடிக்கையையும் கைவிடக் கூடாது என்பதே எமது வேண்டுகோள்.
இந்த மலையக மக்கள் தொடர்பில் இந்த அனர்த்தத்தில் இருந்து அவர்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது இப்பொழுது நாங்கள் விடை காண வேண்டிய விடயமாக இருக்கின்றது.
நாங்கள் செல்லுகின்ற போது நிவாரணங்களை கொண்டு செல்லாமல் இருந்ததற்கு காரணம் அங்கு அவர்களின் தேவை என்னவாக இருக்கின்றது என்பது பற்றி அறிந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே.
நாங்கள் அறிந்ததன் படி 2005ம் ஆண்டு இதே மீரியபெத்த தோட்டப்பகுதிக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்து. ஆனால் அது வெறுமனே எச்சரிக்கையாகவே இருந்தது.
அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதே வரும் அங்கு ஒரு மண்சரிவு இடம்பெற்றது. பின்னர் அங்கு அவர்களை மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் 2007ம் ஆண்டு மண்சரிவு சம்மந்தமான மீண்டும் ஒரு எச்சரிக்கை விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
எனவே இம்முறை வெறுமனே எச்சரிக்கையோடு மாத்திரம் அரச நிர்வாகம் நிறுத்திக் கொள்ளாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடப்பட்டதாக செய்திகளிலே தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் அவ்வாறான எதுவித எச்சரிக்கைகளும் எமக்கு விடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
எனவே இந்த விடயத்தில் குறித்த நிர்வாகங்கள் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
மீரியபெத்த எஸ்கே பிரிவில் இருந்தவர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு சில நடைமுறைகளை கையாண்டார்கள்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையும் தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்தது.
இதில் தோட்ட மனதவள அபிவிருத்தி நிதியத்தின் மீது மக்கள் பெரும் அதிருப்தியை வெளிக்காட்டினார்கள்.
ஏனெனில் 64 வீடுகளில் 22 வீடுகள் தான் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள் அதுவும் முழுமைப்படுத்தப்படவில்லை. எனவே இந்த விடயத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இடத்தினைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த இடங்களில் வீடுகள் அமைக்க வேண்டும். அந்த வீடுகள் உறுதியாகவும் மக்கள் வாழக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
இந்த மக்களை இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக லயத்தில் வாழ வைத்திருக்கின்றோம். அதாவது லயத்தினை குதிரைக் கொட்டில் என்றே கூறுவார்கள். அதிலேதான் அவர்களை நாம் இத்தனை காலமும் வாழ வைத்திருக்கின்றோம்.
அவர்கள் திரும்ப திரும்ப எம்மிடம் தெரிவித்தது தோட்ட மனிதவள நிதியத்தினை இதில் சம்மந்தப்படுத்தபடுத்துவது பற்றி அரசாங்கம் மீளவும் யொசிக்க வேண்டும்.
அவர்களின் விருப்பத்தின் படி தேசிய அபிவிருத்தி அதிகார சபையிடம் மொத்த பொறுப்பையும் கொடுப்பதைத்தான் அவர்கள் விரும்புகின்றார்கள்.
இந்த அனர்த்தம் என்பது சாதாரணமாக ஒரு மனித நேயத்திற்கு அப்பால் நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு கூடுதலான ஒரு ஈடுபாட்டடைக் கொடுத்திருக்கின்றது.
அவர்கள் எமது உறவுகள். எமது தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெறுவதற்கு காரணமே தோட்ட தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம்.
1949ம் ஆண்டு 03ம் இலக்க இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அன்று குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர் மக்களின் குடியுரிமையைப் பாதுகாப்பதற்காகதான் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து தந்தை செல்வா அவர்களால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெற்றது.
இந்த மலையக மக்களைப் பொறுத்த மட்டில் எங்களது ஈடுபாடு அரசியல் ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் மிகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வரலாறு அனைவருக்கும் தெரியும் எமது தமிழ் அரசு கட்சி அரசாங்கத்துடன் ஏற்படுத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் நாங்கள் மலையக மக்களின் குடியுரிமையை வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
இவ்வாறான அரசியல் தொடர்பான பேணுகைகளை நாம் மலையகத்துடன் வைத்திருக்கின்றோம். இப்பொழுது இந்த அனர்த்தம் தொடர்பான விடயம் எமது உறவுகளை மீண்டும் பேணுவதற்கு வழிவகுத்திருக்கின்றது.
இந்த அனர்த்தம் தொடர்பாக நாம் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தியானது,
பாதிப்புக்குள்ளான மக்கள் தொடர்பில் அவர்களின் எதிர்கால மேம்பாடு தொடர்பாக நாங்கள் நிதியுதவிகளைச் செய்து, அதனை அதை முறைப்படி ஒழுங்குபடுத்தி நிரந்தரமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்வதற்கு ஏற்ற விதத்தில் அரசையும் அதன் சம்மந்தப்பட்ட செயற்பாடுகளையும் ஊக்குவிப்பதுதான் எமது செயற்பாடாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw5.html
சந்திரிக்கா எப்போதும் தாமதமாகியே வருவார்: எஸ்.பி.திஸாநாயக்க
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 12:28.01 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரச வைபவங்களில் கலந்து கொள்ளும் போது தாமதமாகியே அந்த வைபவங்களில் கலந்து கொள்வார் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், அரச அதிகாரிகள் அடிக்கடி உடல் தளர்ந்து போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் நிகழ்வுக்கு அவர் பிற்பகல் 3 மணிக்கே வருவார். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எந்த வைபவங்களிலும் தாமதமாக கலந்து கொள்வதில்லை.
அத்துடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட அவர் ஒதுக்கிய நேரத்தில் சந்திப்பார் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த கூற்றுக் குறித்து கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்கவை உயர்த்தி பேசிய அமைச்சர் இன்று அவரை வைத்து வேடிக்கையாக பேசுவதாக கூறியுள்ளார்.
சந்திரிக்காவின் அரசாங்கத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. திஸாநாயக்க, புதிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவானதும் தனது வண்ணங்களை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw4.html
மக்காவுக்கு அனுப்பும் ஜனாதிபதியின் வாக்குறுதி அரசியல் நாடகம்! பொதுபல சேனா
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 12:15.07 PM GMT ]
முஸ்லிம்கள் அனைவரையும் மக்காவுக்கு அனுப்பும் ஜனாதிபதியின் வாக்குறுதி ஒரு அரசியல் நாடகம் என்று பொதுபல சேனா வர்ணித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அரசியல் வாதியும் அந்தந்த இடத்தில் மக்களின் கவனத்தையும், ஆதரவையும் பெற ஒவ்வொரு  இடத்திலும் ஒவ்வொரு வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது.
ஜனாதிபதியும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு வாக்குறுதியை வழங்குவார். அதில் சிலதை நிறைவேற்றுவார். சிலவற்றை அப்டியே மறந்துவிடுவார். அதுதான் அரசியல்.
அரசியல்வாதிகள் இந்த நாட்டுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் அப்படியே நிறைவேறி இருந்தால் இந்த நாடு என்றைக்கோ சொர்க்காபுரியாக மாறியிருக்கும். அதே அடிப்படையிலேயே ஜனாதிபதியின் முஸ்லிம்களை மக்கா அனுப்பும் வாக்குறுதியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாளையே இன்னோரிடத்தில் ஜனாதிபதி பௌத்தர்கள் அனைவரையும் புத்தகயா அனுப்புவதாக கூறினால் அதுகுறித்தும் இவ்வாறுதான் சிந்திக்க வேண்டும். அதைப்பெரிதுபடுத்தவோ, முற்றுமுழுதாக நம்பவோ கூடாது என்றும் ஞானசார தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw3.html
ஜனாதிபதி தேர்தலை வைத்து கூட்டமைப்பு பேரம் பேச வேண்டும்: பிரபா கணேசன்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 11:49.48 AM GMT ]
விடுதலைப் புலிகள் தமக்கு கிடைத்த பல பேரம் பேசும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டார்கள். அது அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்த ஜனாதிபதி தேர்தல் பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது அபிலாஷைகளை வென்றெடுப்பார்கள் என்று வடக்கு தமிழர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இதனை உணர்ந்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சரியான முன் நடவடிக்கைகளை எடுப்பார் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.
மேலும், கொஸ்லாந்த மண்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தமிழ் கூட்டமைப்பு குழுவினருக்கு எனது மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்திய வம்சாவளி மலைநாட்டு தமிழர்களுக்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நான் தலை வணங்குகின்றேன்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் ஆதரவினை அதிகமாகப் பெற்று ஜனாதிபதி மீண்டும் ஆட்சி அமைக்கப் போகின்றார்.
இத்தருணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் வழங்கும் வாக்குகளை வைத்து தமக்கு தேவையான அதிகாரப் பரவலாக்கலை ஜனாதிபதி மூலமாக பெற்றுக் கொள்ளக் கூடிய இறுதி சந்தர்ப்பமாகும்.
இவ் இறுதி சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால் விடுதலைப் புலிகள் விட்ட அதே தவறை மீண்டும் இவர்களும் செய்யப் போகின்றார்கள்.
தமிழ் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமா அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேரினவாத சக்தியை வீட்டுக் அனுப்பி விட்டு மீண்டுமொரு பேரினவாத சக்தியை ஆட்சியில் அமர்த்த வேண்டிய பொறுப்பையா வடகிழக்கு தமிழர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இதனை மனதில் எடுத்துக் கொண்டு இச்சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிபந்தனையின் பெயரில் இராணுவத்தை தாயக பூமியிலிருந்து அகற்றி, ஆளுநராக சிவில் சமூக சேவையினர் ஒருவரை நியமித்து, வட மாகாணத்திற்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்ளல், சிங்கள குடியேற்றத்தை தவிர்த்தல், அபிவிருத்திக்கு மேலதிக நிதியினைப் பெற்றுக் கொள்ளல், மொழி அமுலாக்கல்,போன்ற பல விடயங்களை வைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு அளிப்பது சம்பந்தமாக பேரம் பேச வேண்டிய கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட வேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பாகும்.
கிளையில் இருக்கும் கிளியைவிட கையில் இருக்கும் காகமே மேலானது என்பதை போல் இனிவர முடியாத புதிய ஒருவரை நம்பிக் கொண்டிருக்காமல் இப்போது இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை நம்பி செயல்படுவது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மட்டுமல்லாது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும்.
முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பொறுப்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க சொன்ன கூட்டமைப்பினர் மீண்டும் இத்தவறைச் செய்துவிடக் கூடாது. ஜனாதிபதிக்கும் இவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiw2.html

Geen opmerkingen:

Een reactie posten