[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 03:30.40 PM GMT ]
சிரானி பண்டாரநாயக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான தகவல்களை மறைத்ததாக தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்று கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நீதவான் கிஹான் பிலபிட்டிய அறிவித்துள்ளார்.
சிரானி பண்டாரநாயக்க தனியார் வங்கிகளில் பேணிய கணக்குகள் தொடர்பிலான தகவல்களை நீதிமன்றில் அறிவிக்கக் கூடிய இயலுமை கிடையாது என மத்திய வங்கியின் கண்காணிப்புப் பிரிவு பணிப்பாளர் எல். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னதாகவே சில ஊடகங்களில் வங்கிக் கணக்கு விபரங்கள் வெளியிடப்பட்டதாக சிரானி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
வழக்கு விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix5.html
நாடாளுமன்றத்தில் குழப்பம்! 5 நிமிடங்கள் அமர்வு ஒத்திவைப்பு
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 03:46.50 PM GMT ]
இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
தமது உரையின் போது அநுரகுமார திஸாநாயக்க, லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு சுயாதீனமானதல்ல என்று குறிப்பிட்டார்.
அந்த ஆணைக்குழுவிடம் பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வா, அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து தொடர்பில் தமது விமர்சனத்தை வெளியிட்டார்.
இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பதிலுக்கு விமர்சனங்களை வெளியிட்டார்.
இந்த விமர்சனங்கள் தொடர்ந்தபோது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் அதில் இணைந்துக்கொண்டார்.
இதன்போது கிறிஸ் நோனிஸை, சஜின் வாஸ் தாக்கிய சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இந்த ஆட்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கடத்திச் சென்று விட்டனர் என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் ஊழலை துகிலுரிந்த அனுர திசாநாயக்க
முக்கிய அமைச்சர்கள் 38 பேரின் ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அனுர குமார திசாநாயக்க வெளிப்படுத்த முற்பட்டபோது நாடாளுமன்றம் கடும் அமளிதுமளிக்குள்ளானது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் மற்றும் மோசடி விபரங்கள் தொடர்பில் ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்தினார்.
ஆளுங்கட்சி என்ற வார்த்தை வந்தாலே பாய்ந்து எழுந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் அஸ்வர் எம்.பி. இன்றும் தனது கடுமையான கூச்சலில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து சஜின் வாஸ், ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோரும் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது சபையில் கடும் அமளிதுமளி நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது அனுர விட்ட இடத்திலிருந்து தனது உரையைத் தொடர்ந்தார்.அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இருப்பதாக அவர் தனது உரையின்போது தெரிவித்தார்.
அனுரவின் உரையின் ஆரம்பத்தில் ஆளுங்கட்சியின் சிலர் கூச்சலிட்ட போதிலும், அவரது உரையின் முடிவில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் மேசையில் தட்டி தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix6.html
சந்திரிக்கா உள்ளிட்டோர் ஆதரவில் ஐ.தே.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்! லக்ஷ்மன் கிரியெல்ல
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 04:10.50 PM GMT ]
கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு கடும் போட்டியை உருவாக்கும் வகையில் ஐ.தே.க வேட்பாளர் களமிறக்கப்படுவார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் ஆதரவுடன் எமது வேட்பாளர் வெற்றி பெறுவார்.
அத்துடன் எதிர்க்கட்சிகளின் ஏனைய வேட்பாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியிலிருந்து பிரிந்து வருவோரின் ஆதரவும் எமது வேட்பாளருக்கே கிடைக்கும்.
ஹெல உறுமயவிலிருந்தும் ஒரு குழு எங்களுக்கு ஆதரவளிக்கும். இதன் மூலம் எங்கள் வேட்பாளர் இலகுவாக வெற்றி பெறுவார் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXho0.html
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 04:00.17 PM GMT ]
சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி எஸ் எம் ஆனந்த முருகன் தாக்கல் செய்த இந்த மனுவில் இரண்டு நாடுகளும் செய்து கொண்டுள்ள கைதி பரிமாற்ற உடன்படிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த ஐந்து மீனவர்களும் இந்தியாவின் கரையில் இருந்து 12 கிலோ மீற்றருக்குள் வைத்தே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXix7.html
Geen opmerkingen:
Een reactie posten