தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

ஆபத்தான இடங்களில் தங்கியிருக்கும் மக்கள் பலவந்தமாகவேனும் வெளியேற்றப்படுவர்: மஹிந்த அமரவீர

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும்: ஐ.தே.க. கோரிக்கை
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:13.49 AM GMT ]
மண் சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்து மீரியபெத்தை தோட்ட மக்களுக்கு, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை  வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர உரையாற்றிய பின்னர், கருத்து வெளியிட்ட ஜோன் அமரதுங்க மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்தநிலையில்  குறித்த மக்களுக்கு எதனையாவது நாம் செய்தாக வேண்டும் என்ற அடிப்படையில், அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோருவதாக தெரிவித்தார்.
இதில் யாரும் அரசியல் லாபம் தேட முனையக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இதற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் அமரவீர, எதிர்க்கட்சியினரின் உதவிகளின்றியே அந்த மக்களின் நிவாரணங்களுக்கு அரசாங்கத்திடம் நிதி இருப்பதாக குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs1.html
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலா? சர்வஜன வாக்கெடுப்பா? ஆளும் கட்சிக்குள் பிளவு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:39.32 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா என்பது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார்.
மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டவே விரும்புகின்றேன். அதன் மூலம் மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ஜயரட்ன ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைவாக இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனைத் திட்டத்திற்கு மேலும் சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர்.
இதேவேளை அமைச்சர்களான பிரியங்கர ஜயரட்ன, சீ.பி.ரட்நாயக்க, காமினி லொக்குகே போன்றவர்கள் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்நோக்கத் தயார் என தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs3.html
பாப்பரசரின் விஜயத்தை பிற்போடுமாறு தமக்கு அழுத்தம் வழங்கவில்லை: கத்தோலிக்க திருச்சபை
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:47.42 AM GMT ]
பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் இலங்கை வருகையை தடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தமக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என்று இலங்கை கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது
இது தொடர்பில் கத்தோலிக்க சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பாப்பரசரின் விஜயத்தின் போது தேர்தல்கள் இடம்பெறுமானால் அது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு விடக்கூடும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.
பாப்பரசரின் விஜயத்துக்கு முன்னால் தேர்தல் நடக்குமானால் அது அவரின் விஜயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே பாப்பரசரின் விஜயத்துக்கும் தேர்தலுக்கும் இடையிலான கால இடைவெளியை அதிகரிக்குமாறு தாம் கோரியிருப்பதாக கத்தோலிக்க சபை குறிப்பிட்டுள்ளது.
எனினும் இதற்கான தீர்மானத்தை அரசாங்கமும் தேர்தல்கள் ஆணையாளருமே மேற்கொள்ள முடியும்.
எனவே இந்த விடயத்தில் கத்தோலிக்க திருச்சபை எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் அரசாங்கத்தரப்பில் இருந்தோ ஜனாதிபதியோ அல்லது வேறு எவருமோ பாப்பரசரின் விஜயத்தை பிற்போடுமாறு தமக்கு அழுத்தம் தரவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs4.html
ஆபத்தான இடங்களில் தங்கியிருக்கும் மக்கள் பலவந்தமாகவேனும் வெளியேற்றப்படுவர்: மஹிந்த அமரவீர
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:50.30 AM GMT ]
ஆபத்தான இடங்களில் தங்கியிருக்கும் மக்கள் பலவந்தமாகவேனும் வெளியேற்றப்படுவர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வரும் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்கள் பலவந்தமாக அகற்றப்படுவர். அவ்வாறு அகற்றப்படுவோர் மாற்றுக் காணிகளில் குடியேற்றப்படுவர்.
ஆபத்தான பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு தேசிய கட்டட நிர்மாண ஆய்வு நிறுவனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்குள் இந்த விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
மிக ஆபத்தான, ஆபத்தான மற்றும் குறைந்தளவு ஆபத்தான பிரதேசங்கள் என மூன்று வலயங்களாக பிரிக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகள் சுலபமானதல்ல எனினும், மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjs5.html

Geen opmerkingen:

Een reactie posten